Saturday, December 06 2025 | 06:59:39 AM
Breaking News

மத்திய விமானப்படை தலைமையக தளபதிகள் கருத்தரங்கம்

Connect us on:

மத்திய விமானப்படை தலைமையக தளபதிகள் கருத்தரங்கில்  பங்கேற்பதற்காக  மத்திய விமானப்படை தலைமையகத்திற்கு வருகை தந்த விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை, ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் வரவேற்றார். அவருக்கு இந்திய விமானப்படையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.  இந்த கருத்தரங்கம் டிசம்பர் 18 இல் தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கில், இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதுள்ள பாதுகாப்பு சூழலை வலுப்படுத்துவதில்இந்திய விமானப்படையின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்த விமானப்படை தலைமைத் தளபதி அதிகரித்து வரும் எதிர்பாராத சூழல்களை எதிர்கொள்ளும் வகையில் தயார்நிலையை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார். விமானப்படையின் செயல்பாட்டு தயார்நிலையை மேம்படுத்துதல், பராமரிப்பில் கவனம் செலுத்துதல், உடல் வலிமையை பேணுதல், சைபர் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற அம்சங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் தங்களது பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். புதுமை கண்டுபிடிப்புகள் மூலமும் சுயசார்பு மூலமும் இந்திய விமானப்படையின் போர் திறனை அதிகரிக்கச் செய்ய வேண்டியதன்  அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இக்கருத்தரங்கில்  விமானப்படை வீரர்களுக்கான பயிற்சிகள், சிவில் நிர்வாகத்திற்கு உதவுதல் போன்ற பல்வேறு அம்சங்களில் சிறந்த விளங்கும் செயல்பாட்டை அவர்  பாராட்டினார்.

About Matribhumi Samachar

Check Also

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் …