வனவிலங்கு வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும், மனித-வனவிலங்கு மோதலை தடுப்பதற்கும் ‘வனவிலங்கு வாழ்விடங்களின் மேம்பாடு’, ‘புலிகள் – யானைகள் திட்டம்’ ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய அரசின் நிதியுதவி பெற்ற ‘ஒருங்கிணைந்த வனவிலங்கு வாழ்விட மேம்பாடு’ திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் நிதி உதவி வழங்குகிறது.
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு பொறுப்பேற்கும் ‘ வன உயிரின வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்திற்கு மொத்தம் ரூ. 10455.46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.661.78 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
‘புலிகள் – யானைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு மொத்தம் ரூ.14757.48 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதல் தமிழ்நாட்டுக்கு ரூ.1450.53 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

