Saturday, December 06 2025 | 01:45:33 AM
Breaking News

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்துக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அறிவிப்பு

Connect us on:

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்தில்   உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“ராஜஸ்தானில் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நேரிட்ட விபத்து  ஆழ்ந்த மனவேதனை  அளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலமடைய வேண்டுகிறேன்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது . இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும்.”

About Matribhumi Samachar

Check Also

மண்டல சுற்றுச்சூழல் மாநாடு – டிசம்பர் 6, 7 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது

சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் சார்பில் 2025 டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் …