உணவு பதனப்படுத்தும் மற்றும் பேக்கேஜிங் செய்யும் இயந்திர உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 2024-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி உணவு பதனப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சுப்ரதா குப்தா, தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் உணவுப் பதனப்படுத்தும் தொழிலின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் உலகளவிலான போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான நடைமுறைத் தீர்வுகளை விவாதிப்பதற்கான மேடையாக இந்த கலந்துரையாடல் அமைந்தது.
இதில் உரையாற்றிய உணவு பதனப்படுத்தும் தொழில்துறை செயலாளர், நாட்டின்உணவு பதனப்படுத்தும் தொழில்துறையின் வளர்ச்சி குறித்தும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளில் இயந்திரங்களின் பங்களிப்பு குறித்தும் வலியுறுத்தினார். ஆராய்ச்சியும் புதிய கண்டுபிடிப்புகளும் ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களின் உலகளாவிய போட்டித்தன்மை, அதிநவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் முழுத் திறனையும் வெளிக்கொண்டு வரும் வாய்ப்பு ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் உள்ள பெரிய, சிறிய அளவிலான உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள், தரமான மூலப்பொருட்கள் கிடைப்பது, அவற்றின் தேவைகள் போன்றவை குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
முதலீடுகளை ஈர்ப்பதற்கும், தர நிலைகளை மேம்படுத்துவதற்கும், தொழில்நுட்ப பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பணிகளை ஊக்குவிப்பதற்கும் உகந்த சூழலை உருவாக்க உணவு பதனப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தொழில்துறை பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
Matribhumi Samachar Tamil

