குவைத்தின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா பிரதமருக்கு இந்த விருதை வழங்கிக் கௌரவித்தார். குவைத் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையிலான நீண்டகால நட்பு, , குவைத்தில் உள்ள இந்திய சமூகம் மற்றும் 1.4 பில்லியன் இந்திய மக்களுக்கு பிரதமர் இந்த விருதை அர்ப்பணித்தார்.
43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத் நாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பயணத்தை மேற்கொண்டதன் மூலம் இவ்விருது வழங்கப்படுவது விழாவுக்கு ஒரு சிறப்புப் பெருமையைச் சேர்த்தது.
இந்த விருது 1974-ல் நிறுவப்பட்டது. அதிலிருந்து, உலக அளவில் குறிப்பிட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.