Wednesday, December 25 2024 | 12:27:08 AM
Breaking News

‘பொன்னான பாரதம்: பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி’ -2025 குடியரசு தின அணிவகுப்பின் போது கடமைப்பாதையில் அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படவுள்ளது

Connect us on:

ஆண்டு தோறும் குடியரசு தின கொண்டாட்டத்தின் (ஆர்.டி.சி) ஒரு பகுதியாக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு அமைச்சகங்கள் / துறைகள் கடமைப் பாதையில் தங்கள் அலங்கார ஊர்திகளை காட்சிப்படுத்துகின்றன.  இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளுக்கான கருப்பொருள் ‘பொன்னான பாரதம்: பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, இது தொடர்பான பல்வேறு அம்சங்களை முடிவு செய்ய ஒரு ஆலோசனை நடைமுறையை பாதுகாப்பு அமைச்சகம்  மேற்கொண்டது. அலங்கார ஊர்திகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க ஏப்ரல்  மாதம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெறப்பட்ட பல்வேறு ஆலோசனைகள் நடைமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் அலங்கார ஊர்திகளுக்கான கருப்பொருளும் முடிவு செய்யப்பட்டது.

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நன்கு நிறுவப்பட்ட அமைப்பு உள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் / துறைகளிடமிருந்து அலங்கார ஊர்திகளுக்கான முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்சகம் வரவேற்கிறது. கலை, கலாச்சாரம், ஓவியம், சிற்பம், இசை, கட்டிடக்கலை, நடனக் கலை போன்ற துறைகளில் புகழ்பெற்ற நபர்களை உள்ளடக்கிய வல்லுநர் குழுவின் தொடர் கூட்டங்களில் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் / துறைகளிடமிருந்து பெறப்பட்ட  முன்மொழிவுகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

About Matribhumi Samachar

Check Also

‘வீர பாலகர் தினம்’ – 2024 டிசம்பர் 26-ல் கொண்டாடப்படுகிறது

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2024 டிசம்பர் 26 அன்று  வீர பாலகர் தினத்தைக்கொண்டாட இருப்பதோடு பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்கார் …