“பாராட்டுக்குரியது! திறமையான மேலாண்மை, செயலூக்கமான நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த முயற்சியான சிறப்பு இயக்கம் 4.0, சிறந்த முடிவுகளை அடைந்துள்ளது. கூட்டு முயற்சிகள் எவ்வாறு நிலையான முடிவுகளுக்கு வழிவகுக்கும், தூய்மை, பொருளாதார விவேகம் இரண்டையும் ஊக்குவிக்கும் என்பதை இது காட்டுகிறது.”
-பிரதமர் நரேந்திர மோடி
தூய்மை, திறன் வாய்ந்த கழிவு மேலாண்மை ஆகியவை நல்ல நிர்வாகத்தின் அடித்தளங்களாகும். இந்த நடைமுறைகள் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்வது மட்டுமல்லாமல், நிர்வாக செயல்திறன், மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை ஆகியவற்றையும் அடையாளப்படுத்துகின்றன. ஒரு நகரத்தின் தூய்மை, அதன் கழிவு மேலாண்மை அமைப்பின் செயல்திறன் ஆகியவை நல்லாட்சியின் குறியீடுகளாக அமைகின்றன. இந்தியாவில், தூய்மை இயக்கங்கள் வெறும் துப்புரவு இயக்கங்களிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்தும். முன்முயற்சிகளாக பரிணமித்துள்ளன. சமூகங்களை மேம்படுத்துவதற்கும் பொது வளங்களை மேம்படுத்துவதற்கும் தூய்மையும் நிர்வாகமும் எவ்வாறு ஒன்றையொன்று இணைக்கின்றன என்பதை நிரூபிக்கின்றன.
கழிவிலிருந்து செல்வம்: இந்த முயற்சியின் கீழ், நிராகரிக்கப்பட்ட பொருட்கள் கலை, பயன்பாட்டு பொருட்களாக மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.