உலகளவில் மிகவும் துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்புகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. 3-வது பெரிய புத்தொழில் மையமாக இந்தியா தனது இடத்தைப் பெற்றுள்ளது. 100+ க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன், இந்திய புத்தொழில் சூழல், புதுமை, தொழில்முனைவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது.
இந்தியாவில் 73,000 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநர் உள்ளார். அவை ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது அரசால் ஆதரிக்கப்படும் 1,57,066 புத்தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதியாகும்.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் தொழில்முனைவோர் உணர்வு ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, தில்லி போன்ற நகரங்கள் கண்டுபிடிப்புகளின் மையங்களாக மாறிவிட்டன. மலிவு இணையத்தின் பரவலான கிடைக்கும் தன்மை, இளம் ஆற்றல்மிக்க பணியாளர்களுடன் இணைந்து பல்வேறு துறைகளில் புத்தொழில்களின் வளர்ச்சியைத் தூண்டியுள்ளது.
2016-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் இந்த முயற்சியில் மைல்கல்லாக அமைந்துள்ளது. 2024 டிசம்பர் 25 நிலவரப்படி, 157,066 புத்தொழில் நிறுவனங்கள், தொழில் – உள்நாட்டு வர்த்தகத்தை மேம்பாட்டுத் துறையால் (டிபிஐஐடி – DPIIT) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 759,303 பயனர்கள் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
*வணிகம் செய்வதில் எளிமை:
*வரிச் சலுகைகள்
*நிதி ஆதரவு
துறை சார்ந்த கொள்கைகள் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன
*பாரத் ஸ்டார்ட்அப் அறிவு அணுகல் பதிவகம் (பாஸ்கர்)
* அடல் புதுமைப் படைப்பு இயக்கம், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிப் பயன்படுத்துவதற்கான தேசிய முன்முயற்சி (நிதி -NIDHI) போன்ற முன்முயற்சிகள் புதுமையாளர்களுக்கு உள்கட்டமைப்பு, நிதி ஆதரவை வழங்குகின்றன.
உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு: புத்தொழில்கள் நாடு முழுவதும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான வேலைகளை உருவாக்கியுள்ளன.
இந்தியா, உலகளாவிய புத்தொழில் வரையறைகளை அமைப்பதற்கான பாதையில் சிறப்பாக முன்னேறி வருகிறது.