Thursday, December 26 2024 | 09:52:38 AM
Breaking News

15-வது நிதிக்குழு பரிந்துரை: ராஜஸ்தானுக்கு ரூ.614 கோடி, ஒடிசாவுக்கு ரூ.455 கோடி விடுவிப்பு

Connect us on:

ராஜஸ்தான், ஒடிசாவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு (XV FC) பரிந்துரை ஒதுக்கீடுகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை, 2024-25 நிதியாண்டின் இரண்டாவது தவணையான நிபந்தனையற்ற மானியங்களின் இரண்டாவது தவணை ரூ.560.63 கோடியும், 2024-25 நிதியாண்டிற்கான நிபந்தனையற்ற நிதியின் முதல் தவணையின் நிறுத்தி வைக்கப்பட்ட தொகையான ரூ.53.4123 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் 10,105 தகுதியான கிராம ஊராட்சிகள், 315 தகுதியான வட்டார ஊராட்சிகள், 20 மாவட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படும்.

ஒடிசாவில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2024-25 நிதியாண்டின் 2வது தவணையான நிபந்தனையற்ற மானியங்கள் ரூ.370.20 கோடியும், 2024-25 நிதியாண்டிற்கான நிபந்தனையற்ற மானியங்களின் முதல் தவணை ரூ.84.5086 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள 6794 கிராம பஞ்சாயத்துகள், 314 வட்டார பஞ்சாயத்துகள், 30 மாவட்ட ஊராட்சிகளுக்கு பொருந்தும்.

சம்பளம், பிற நிர்வாக செலவுகள் தவிர, அரசியலமைப்பின் பதினோராவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தி ஒன்பது (29) விஷயங்களின் கீழ், இடம் சார்ந்த தேவைகளுக்கு பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் (பி.ஆர்.ஐ) / ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் (ஆர்.எல்.பி) நிபந்தனையற்ற நிதி பயன்படுத்தப்படும். இதில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல், வீட்டுக் கழிவுகளின் மேலாண்மை – சுத்திகரிப்பு,  குடிநீர் வழங்குதல், மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி உள்ளிட்டவை அடங்கும்.

மத்திய அரசு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம் (குடிநீர் – துப்புரவு துறை) மூலம் , ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக மாநிலங்களுக்கு பதினைந்தாவது நிதிக்குழு பரிந்துரையை விடுவிக்கப் பரிந்துரை செய்கிறது. பரிந்துரைக்கப்பட்ட செய்யப்பட்ட நிதி ஒரு நிதியாண்டில் 2 தவணைகளில் வழங்கப்படுகிறது.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் பதினைந்தாவது நிதிக்குழு மானியங்கள் அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நிதி உதவி கிராமப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை மேம்படுத்துகிறது. பொறுப்புணர்வை மேம்படுத்தி கிராமங்களில் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கிறது.

About Matribhumi Samachar

Check Also

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி விகிதம்

கேள்வி 1. பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளதா? பதில்: சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி …