Thursday, December 26 2024 | 10:06:46 AM
Breaking News

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் பழைய, பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்கள் விற்பனை

Connect us on:

1. மின்சார வாகனங்கள் தவிர பழையபயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை குறித்து 55-வது சரக்கு – சேவை வரிக் (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள் என்ன?

பதில்: வரிமுறையை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாகமின்சார வாகனங்கள் உட்பட அனைத்து பழையபயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனைக்கும் ஒரே மாதிரியாக 18 சதவீத சரக்கு – சேவை வரி (ஜிஎஸ்டி) வரி விதிக்க கவுன்சில் பரிந்துரைத்தது. முன்பு வேறு வேறு விகிதங்களில் வரி இருந்தது. ஜிஎஸ்டி கவுன்சில் இதற்குப் புதிய வரி விதிக்கப் பரிந்துரைக்கவில்லை.

2. பழையபயன்படுத்திய வாகனங்களின் விற்பனையில் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியவர்கள் யார்?

பதில்: பழையபயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குவதுவிற்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்கள் போன்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியவர்கள்.

3. ஒரு தனிநபர் மற்றொரு தனிநபருக்கு பழையபயன்படுத்திய காரை விற்றால் ஜிஎஸ்டி பொருந்துமா?

பதில்: இல்லை. இந்த விஷயத்தில் ஜிஎஸ்டி பொருந்தாது.

4. பழையபயன்படுத்திய வாகனத்தின் விற்பனை மதிப்பில் ஜிஎஸ்டி விதிக்கப்படுமா?

பதில்: பதிவு செய்த நபர் வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 32-ன் கீழ் தேய்மானம் கோரினால்விற்பவரின் லாப விகித மதிப்பின் அடிப்படையில் மட்டுமே ஜிஎஸ்டி செலுத்தப்பட வேண்டும். அதாவதுவிற்கும் தேதியில் வாகனத்தின் விற்பனைக்கான விலைக்கும் தேய்மான மதிப்புக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். அத்தகைய விகிதம் எதிர்மறையாக இருந்தால்ஜிஎஸ்டி பொருந்தாது. ஜிஎஸ்டி செலுத்தத் தேவை இல்லை. மற்ற எந்த சந்தர்ப்பத்திலும்ஜிஎஸ்டி,  விற்பவரின் லாப மதிப்பில் மட்டுமே செலுத்தப்படும். அதாவது தேய்மானத்துக்குப் பிந்தைய விற்பனை விலைக்கும் வாங்குபவர் வாங்கும் விலைக்கும் இடையிலான வேறுபாட்டுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அத்தகைய விகிதம் எதிர்மறையாக இருந்தால், ஜிஎஸ்டி பொருந்தாது.

எடுத்துக்காட்டு 1:

ஒரு பதிவு செய்யப்பட்ட நபர் பழையபயன்படுத்திய வாகனத்தை மற்றொரு நபருக்கு ரூ.10 லட்சத்திற்கு விற்கிறார். வாகனம் புதிதாக வாங்கப்பட்ட விலை ரூ .20 லட்சமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். வருமான வரிச் சட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் தேய்மானம் கோரி இருக்கிறார் என வைத்துக் கொள்ளலாம். அப்படி இருந்தால் அவர் எந்த ஜிஎஸ்டி-யையும் செலுத்த தேவையில்லை. அதாவது இங்கு பழைய வாகன விற்பனை விலையின் வித்தியாச மதிப்பு என்பது ரூ. 10 லட்சமாக உள்ளது. தேய்மானத்துக்குப் பின் அதன் மதிப்பு ரூ. 12 லட்சம். அதாவது ரூ.20 லட்சம் – ரூ.8 லட்சம் = ரூ. 12 லட்சம். ஆனால் அவர் வாகனத்தை ரூ. 10 லட்சத்துக்கே விற்கிறார். இது எதிர்மறையானது. லாபம் இல்லாதது. தேய்மானத்துக்குப் பிந்தைய மதிப்பை விட விற்கும் விலை குறைவாக இருக்கிறது. எனவே ஜிஎஸ்டி செலுத்தத் தேவை இல்லை. மேலே உள்ள எடுத்துக்காட்டில் தேய்மானத்துக்குப் பின் மதிப்பு ரூ.12 லட்சமாகவும்பழைய வாகன விற்பனை விலை ரூ.15 லட்சமாகவும் இருந்தால்அப்போது விற்பவர் லாபத்தில் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதாவது ரூ.3 லட்சத்துக்கு 18% சரக்கு – சேவை வரி செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு 2:

ஒரு நபர் தமது பழையபயன்படுத்திய வாகனத்தை மற்றொரு நபருக்கு ரூ. 10 லட்சத்திற்கு விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் அந்த வாகனத்தை வாங்கியபோது அதன் விலை ரூ. 12 லட்சமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால் அவர் எந்த ஜிஎஸ்டி-யையும் செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் விற்பவரின் லாபம் இங்கு எதிர்மறையாக உள்ளது. வாகனத்தின் கொள்முதல் விலை ரூ. 20 லட்சம் மற்றும் விற்பனை விலை ரூ. 22 லட்சம் என்றால்விற்பவரின் லாபத் தொகைக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதாவது லாபத் தொகையான ரூ. 2 லட்சத்துக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

About Matribhumi Samachar

Check Also

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி விகிதம்

கேள்வி 1. பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளதா? பதில்: சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்ன் மீதான ஜி.எஸ்.டி …