Friday, January 02 2026 | 04:35:30 AM
Breaking News

எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Connect us on:

மலையாள திரைப்படம் மற்றும் இலக்கியத்தில் மிகவும் மதிப்புமிக்க நபர்களில் ஒருவரான திரு. எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு. எம்.டி. வாசுதேவன் நாயர் அவர்களின் படைப்புகள், மனித உணர்வுகளை ஆழமாக ஆராய்ந்தவை.  அவரது படைப்புகள் பல தலைமுறைகளை வடிவமைத்துள்ளன என்றும், மேலும் பலருக்கு அவை தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“மலையாள திரைப்படத்திலும் இலக்கியத்திலும் மிகவும் மதிப்புமிக்க நபர்களில் ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு குறித்து வருத்தம் அடைந்தேன். மனித உணர்வுகளின் ஆழமான ஆய்வுகளுடன் கூடிய அவரது படைப்புகள் தலைமுறையினர்களை வடிவமைத்துள்ளன. மேலும் பலருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். குரல் எழுப்ப இயலாதவர்களுக்காகவும், விளிம்புநிலை மக்களுக்காகவும் அவர் குரல் கொடுத்தார்.  அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குறித்தே எனது எண்ணங்கள் உள்ளன.  ஓம் சாந்தி.”

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

தேசிய வீரச் சிறார் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரதமரின் தேசிய வீரச் சிறார் விருதுகளை புதுதில்லியில் இன்று (26.12.2025) வழங்கினார். சமூக சேவை, …