Sunday, December 29 2024 | 01:42:46 PM
Breaking News

சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் ஆண்டு இறுதி ஆய்வு அறிக்கை

Connect us on:

சிறுபான்மையினர் நல அமைச்சகம் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திலிருந்து உருவாக்கப்பட்டது. இந்த சமூகங்களுக்கான கொள்கை உருவாக்கம், ஒருங்கிணைப்பு, மதிப்பீடு, வளர்ச்சித்   திட்டங்களை மேற்பார்வையிடுதல் ஆகியவை அமைச்சகத்தின் செயல்பாடுகளில் அடங்கும். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1992 -ன் கீழ் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. பௌத்தர்கள், கிருத்தவர்கள், முஸ்லிம்கள், பார்சிகள், சீக்கியர்கள் ஆகிய ஐந்து மத சமூகங்கள் ஆரம்பத்தில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டனர். 2014-ம் ஆண்டில், சமணர்களும் சேர்க்கப்பட்டனர்.

2024 ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் முக்கிய சாதனைகள் பின்வருமாறு:

பிரதமரின் மேம்பாட்டுத் திட்டம் நாட்டுப்புற கைவினைஞர்கள் ஊக்குவிப்பு விழா

100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறுபான்மையினர் நல அமைச்சகம் 2024 ஜூலை 16 முதல் 31 வரை புது தில்லியில் நாட்டுப்புற கைவினைஞர்கள் ஊக்குவிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தது. இந்தியா முழுவதிலுமிருந்து சிறுபான்மை சமூகக் கைவினைஞர்களை ஒன்றிணைத்தது. இந்தத் தளம் கைவினைஞர்களுக்கு அவர்களின் உள்நாட்டு கலைகள், கைவினைகள் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. இந்த நிகழ்வு சிறுபான்மை சமூகங்களின் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்காக மட்டுமல்லாமல், ஒரு புதுமையான மற்றும் தொழில்முனைவோரை வளர்ப்பதற்கும் வடிவமைக்கப்பட்டது

கைவினைஞர்களுக்கான சூழல். சந்தைப்படுத்தல், ஏற்றுமதி மற்றும் ஆன்லைன் வணிகம், வடிவமைப்பு, ஜிஎஸ்டி மற்றும் விற்பனை போன்ற துறைகளில் அவர்களின் திறன்களை மேம்படுத்த, கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் ஆதரவுடன் அமைச்சகத்தால் தினசரி பயிலரங்குகள்  நடத்தப்பட்டன, இது அவர்களின் திறமைகளை மேம்படுத்த முழுமையான அணுகுமுறையை உறுதி செய்தது. அமைச்சகத்தின் முக்கிய அறிவுசார் கூட்டாளிகளான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி , தேசிய வடிவமைப்பு நிறுவனம் ஆகியவையும் பங்கேற்று, அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் அவர்களுக்கு ஆதரவளித்த கைவினைஞர்கள் மற்றும் அவர்களின் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தின.

பல்வேறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 162 கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்கள் இந்த விழாவில் காட்சிப்படுத்தப்பட்டன.

தொடக்க நிகழ்ச்சியின் போது, காபி டேபிள் புத்தகம் வெளியிடப்பட்டு அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் பரவலாக்கப்பட்டன. தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி நிதிக் கழகத்தின் கடன் திட்டமும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின் போது, கடன் அனுமதி கடிதங்கள் மற்றும் பாராட்டு பதக்கங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

சிங்க நடனம், மணிப்புரி நடனம், பாங்க்ரா மற்றும் பிற நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு சமூகங்களின் வளமான கலாச்சார பாரம்பரியம் இந்த நிகழ்வின் போது காட்சிப்படுத்தப்பட்டன, இது பார்வையாளர்களை மகிழ்வித்தது மட்டுமின்றி, இந்தியாவின் மாறுபட்ட கலாச்சார அம்சங்களை பார்வையாளர்களுக்குத் தெரிவித்தது.

நிகழ்வின் போது நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, பதிலளித்தவர்களில் 78% பேர் விழாவில்  நேர்மறையான அல்லது சிறந்த அனுபவத்தைப் பெற்றதாக தெரிவித்தனர். அதே நேரத்தில் சுமார் 97% பேர் அமைச்சகம் நடத்தும் இதுபோன்ற எதிர்கால நிகழ்வுகளில் பங்கேற்க தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் (என்.எம்.டி.எஃப்.சி)

தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம்  என்பது மத்திய  அரசின் சிறுபான்மையினர் நல  அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் நிறுவனங்கள் சட்டம் 2013-ன் பிரிவு 8 -ன் படியான ஓர் அரசு நிறுவனமாகும். சிறுபான்மை சமூகங்களிடையே பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இந்த நிறுவனம் அந்தந்த மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகம்,  கனரா வங்கி ஆகியவற்றால் நியமிக்கப்பட்ட மாநில சேனல் ஏஜென்சிகள்  மூலம் அமைக்கப்பட்டுள்ளது, தொழில் செய்யும் குழு மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சமீபத்தில், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பஞ்சாப் கிராமின் வங்கி ஆகியவையும் என்.எம்.டி.எஃப்.சி திட்டங்களை மறுநிதியளிப்பு முறையில் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

2023-24 நிதியாண்டின் போது, என்.எம்.டி.எஃப்.சி 1.84 லட்சம் பயனாளிகளை உள்ளடக்கிய ரூ.765.45 கோடி சலுகைக் கடனை வழங்கியுள்ளது. மேலும், தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 24.84 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.9,228.19 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளது. இவர்களில் 85 சதவீதத்திற்கும் அதிகமான பயனாளிகள் பெண்கள் ஆவர்.

விண்ணப்பதாரர்கள், எஸ்சிஏக்கள் மற்றும் என்எம்டிஎஃப்சி இடையேயான கடன் கணக்கு செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்க மிலன் (என்எம்டிஎஃப்சிக்கான சிறுபான்மை கடன் கணக்கியல் மென்பொருள்) செயலியை என்எம்டிஎஃப்சி அறிமுகம் செய்துள்ளது. மிலன் மொபைல் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பதிப்பில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரை 2024

ஹஜ் 2024 -ன் போது, சிறுபான்மையினர் நல அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம்,  சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய ஹஜ் குழு மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து வெற்றியை உறுதி செய்ய தடையின்றி ஒத்துழைத்தன.

ஹஜ் 2024-ன் சிறப்பம்சங்கள் வருமாறு:

தங்குமிடம் மற்றும் விமான விவரங்கள், பயணப் பொருட்கள் பற்றிய தகவல்கள், அவசர உதவி எண் , குறை தீர்த்தல், பின்னூட்டம், மொழி மொழிபெயர்ப்பு, யாத்திரை தொடர்பான இதர தகவல்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன . இந்த ஆண்டு (2024) 9,000 க்கும் மேற்பட்ட குறைகள் மற்றும் 2,000 க்கும் மேற்பட்ட எஸ்ஓஎஸ் வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.

4,557 க்கும் மேற்பட்ட பெண் யாத்ரீகர்கள், மெஹ்ரம் (ஆண்துணை இல்லாத பெண்கள்) இல்லாமல் யாத்திரை மேற்கொண்டனர், இது இன்றுவரை அதிக எண்ணிக்கையைக் குறிக்கிறது.

264 நிர்வாக பிரதிநிதிகள், 356 மருத்துவ பிரதிநிதிகள், 1500 பருவகால ஊழியர்கள் மற்றும் 641 காதிம்-உல்-ஹஜ்ஜாஜ் யாத்ரீகர்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டனர். இந்திய யாத்ரீகர்களின் ஒட்டுமொத்த ஹஜ் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக  தூதுக்குழுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு 564 ஹஜ் குழு அமைப்பாளர்கள் உணவு வழங்கினர்.

மருத்துவ பணி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, 3,74,613 நோயாளிகளுக்கு  சிகிச்சையளிக்கப்பட்டது, 3,51,473 வெளிநோயாளிகள் நிர்வகிக்கப்பட்டனர் மேலும், 3,178 யாத்ரீகர்களுக்கு  உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜியோ பார்சி திட்டம்

ஜியோ பார்சி என்பது பார்சி சமூகத்தின் மக்கள்தொகை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ஒரு தனித்துவமான மத்திய துறை திட்டமாகும். இந்த திட்டம் 2013-14 இல் தொடங்கப்பட்டது. அறிவியல் பூர்வமான நெறிமுறைகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட தலையீடுகளைப் பின்பற்றுவதன் மூலம் பார்சி மக்கள் தொகையின் குறைந்து வரும் போக்கை மாற்றுவது, அவர்களின் மக்கள் தொகையை நிலைப்படுத்துவது மற்றும் இந்தியாவில் பார்சிகளின் மக்கள் தொகையை அதிகரிப்பது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வக்ஃப் (திருத்த) மசோதா, 2024-ஐ அறிமுகப்படுத்தியது

08.08.2024 மக்களவையில். இதையடுத்து, இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளுக்குள் மசோதாவை ஆய்வு செய்து நாடாளுமன்றத்தில் மசோதா குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பது நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கான ஆணையாகும்.

About Matribhumi Samachar

Check Also

விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைத்தல் என்ற அரிய சாதனைக்கு முயற்சிக்கிறது இஸ்ரோவின் ஆண்டு நிறைவுப் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோவின்) ஆண்டு நிறைவுப் பணி டிசம்பர் 30-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு “ஸ்பேஸ் …