ஜம்மு காஷ்மீரின் ராம்பனில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டத்திற்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், 70 வயது அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் திட்டம், பிரதமரின் சக்தி வீடுகள் திட்டம், பிரதமர் விஸ்வகர்மா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் போன்றவை குறித்து விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், பல்வேறு பாரம்பரிய கைவினைகளில் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்களை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
குடிநீர், மின்சாரம், வீட்டுவசதி, பிற வசதிகள் தொடர்பான திட்டங்களை திறம்பட செயல்படுத்த அதிகாரிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
திஷா கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.