Monday, January 06 2025 | 07:24:21 PM
Breaking News

ரயில்வே அமைச்சகத்தின் 2024-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகளும் சாதனைகளும்

Connect us on:

வளர்ச்சி அடைந்த பாரதம் 2047-க்கான முயற்சியாக, ரயில்வே 2024 ஆம் ஆண்டில் தனது மாற்றத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து, நவீனமயமாக்கல், முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்திற்கு வழி வகுத்தது. உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவத்தை எதிர்கொள்வது, சரக்கு செயல்திறனை அதிகரிப்பது, மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம், ரயில்வே தேசிய வளர்ச்சிக்கான கிரியா ஊக்கியாக தனது பங்கை உறுதிப்படுத்தியுள்ளது.

ரயில்வே அமைச்சகம், 2024-ம் ஆண்டில் மேற்கொண்ட சில முக்கிய செயல்பாடுகளும் அதன் சில முக்கிய சாதனைகளும்:

*இந்திய ரயில்வே 2024 ஆம் ஆண்டில் 6,450 கிலோ மீட்டர் முழுமையான பாதை புதுப்பித்தலை மேற்கொண்டது.

* இந்திய ரயில்வே 2024 ஆம் ஆண்டில் 3,210 கிலோ மீட்டரை மின்சாரமயமாக்கியது.

* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 2,014 மெகாவாட்டை எட்டியது.

*136 வந்தே பாரத் ரயில்கள், முதல் நமோ பாரத் ரேபிட் ரயில் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

* உச்ச பட்ச பயண காலங்களில் 21,513 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

*இந்திய ரயில்வே 2024 ஆம் ஆண்டில் 1,473 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றி, 3.86% வளர்ச்சியை அடைந்தது.

*அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 1,337 நிலையங்களில் 1,198 நிலையங்களில் பணிகள் தொடங்கப்பட்டன

*கவச் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய 10,000 என்ஜின்கள் பொருத்தப்பட்டு 9000 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

*80 நிலையங்கள், 78 கட்டமைப்புகள் உட்பட இந்திய ரயில்வேயின் பாரம்பரிய தளங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன.

* 7200 கி.மீ நீளமுள்ள ரயில் பாதையில் பிரிவு வேகம், மணிக்கு 110 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

* சரக்கு முனையங்களை அமைப்பதில் தொழில்துறையினரின் முதலீட்டை அதிகரிப்பதற்காக, ‘கதி சக்தி மல்டி-மாடல் கார்கோ டெர்மினல்கள் (GCT) நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

*2024 ஆம் ஆண்டில் மூன்று பொருளாதார வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

*எரிசக்தி, கனிமம், சிமெண்ட் வழித்தடங்கள் 2,911 கிலோமீட்டர் நீளமுள்ள 51 திட்டங்களைக் கொண்டிருந்தன. இதன் பணிகள் ரூ.57,313 கோடி செலவில் நிறைவடைந்தன.

*சுரங்கப்பாதை தகவல் தொடர்பு அமைப்பு: சுரங்கப்பாதை தகவல்தொடர்பு வசதி வழங்கும் திட்டம் பல்வேறு ரயில்வேக்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

*ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (OFC):2023-24 நிதியாண்டில், இந்திய ரயில்வே நவம்பர் 2024 வரை 1411 ஆர்.கே.எம் ஆப்டிகல் ஃபைபர் கேபிளை வழங்கியுள்ளது.

*ரயில் நிலையங்களில் வைஃபை வசதி: இதுவரை 6112 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது.

*ரயில் நிலையங்களில் சிசிடிவி: நிறுத்த நிலையங்கள் தவிர அனைத்து நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை மொத்தம் 1051 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

*2030 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்ப்பாளராக மாற இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது.

*நவம்பர் 2024 நிலவரப்படி, தோராயமாக 487 மெகாவாட் சூரிய ஆலைகள் (கூரை – தரையில் பொருத்தப்பட்டவை), சுமார் 103 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

*ஏறத்தாழ 2014 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க நிறுவுதிறன் இணைக்கப்பட்டுள்ளது.

*தற்போது, இந்திய ரயில்வேயில்  80 பாரம்பரிய நிலையங்கள், 78 பாரம்பரிய கட்டடங்கள், கட்டமைப்புகள் உள்ளன. அவை இந்திய ரயில்வேயின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

*புத்தகங்கள், புகைப்படங்கள், வரைபடங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட தேசிய ரயில் அருங்காட்சியக ஆவணக் காப்பகங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி புனேவில் உள்ள சி-டாக் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.

*பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் இந்திய ரயில்வே வீரர்கள்  மூன்று பேர் பதக்கம் வென்றனர்:

அமன் ஷெராவத் – வெண்கலம் (மல்யுத்தம்)

ஸ்வப்னில் குசாலே – வெண்கலம் (துப்பாக்கி சுடுதல்)

அமித் ரோஹிதாஸ் – வெண்கலம் (ஹாக்கி)

About Matribhumi Samachar

Check Also

டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்

அறிமுகம் டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகள் மக்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கும்  உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. …