இந்திய கடற்படையின் சார்பில் அரை மராத்தான் ஓட்டம் பிப்ரவரி மாதம் 25-ந் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ளது. இந்த ஓட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து பலர் பங்கேற்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது: 21.1 கி.மீ தொலைவிலான அரை மராத்தான் ஓட்டத்தோடு 10 கி.மீ, 5 கி.மீ தொலைவிற்கான ஓட்டங்களும் இதில் இடம் பெறுகின்றன. இந்த ஓட்டங்களில் திறன் வாய்ந்த அனைத்து ஓட்டப் பந்தய வீரர்களும் கலந்து கொள்ளலாம் .
இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வு ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா கேட், வரலாற்று சிறப்புமிக்க கடமைப் பாதை ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் இந்த மராத்தான் ஓட்டத்திற்கான பாதை அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும், சிவில் சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நபர்களும் பங்கேற்கின்றனர். இந்த ஓட்டம் அனைத்து தரப்பினரின் உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இதில் பங்கேற்கும் நபர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றவும் ஊக்குவிக்கிறது.