இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம், வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம், ஆய்வகச் சேவைகளின் நலன், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
இது சம்பந்தமாக, இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம்,” ” பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு ” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்னையில் இன்று ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய விஞ்ஞானி-F/மூத்த இயக்குனர், தலைவர் (சென்னை கிளை அலுவலகம்); ஸ்ரீமதி.ஜி.பவானி, தலைமை விருந்தினர், பிரமுகர்கள், பங்கேற்பாளர்கள் ஆகியோரை வரவேற்றார். இத்திட்டத்தின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்த அவர், தொழில்துறையின் நலனுக்காக “மானக் மந்தன்” என்ற தலைப்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு பிஐஎஸ் ஏற்பாடு செய்து வருகிறது என்று கூறினார். மேலும் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்கள் , வரைவுகளை உள்ளூர் உற்பத்தியாளர்கள், தொழில்துறையினர், வர்த்தக அமைப்புகளுக்கு பகிரவும் திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக சபை, தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள், கல்வியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர் என்றார்.
மேலும் இந்த மானக் மந்தன் நிகழ்ச்சி பாரம்பரிய மருத்துவத்தில் இந்திய தரநிலைகள் குறிப்பாக இஞ்சி, வசம்பு குறித்த விரிவான விவாதங்களையும் அவற்றின் முக்கிய அம்சங்கள், தரநிலையை நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம், இந்திய தரநிலை 18842: 2024 & 18412:2023 யின் அம்சங்கள் ஆகியவை குறித்த கலந்துரையாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கூறினார்.
சென்னையில் உள்ள மத்திய சித்தா ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் என்.ஜே.முத்துக்குமார், நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று தொடக்க உரையாற்றினார். பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தர நியமத்தின்படி சான்றளிக்கப்படும் நடவடிக்கை நுகர்வோரின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதாக உள்ளது என்று கூறினார். இணக்க மதிப்பீட்டுத் திட்டம், தயாரிப்பு பாதுகாப்பு, சுற்றுச்சூழல், தரமான அளவுகோல்களைப் பின்பற்றுவதை இது உறுதி செய்கிறது என்றும் . இந்த சூழலில், தரத்தின் தேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிஐஎஸ் அமைவனத்தால் மானக் மந்தன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தரநிலைகள் குறித்த தொழில்நுட்ப விவாதத்தை புது தில்லியின் ஆயுஷ் துறையின் விஞ்ஞானி-B டாக்டர்.கிருத்திகா மேற்கொண்டார்.
முன்னதாக, பிஐஎஸ் செயல்பாடுகள் மற்றும் e -BIS & BIS Care செயலி உள்ளிட்ட அந்த அமைவனத்தின் அண்மை கால முயற்சிகள் குறித்து சென்னை விஞ்ஞானி-டி ஸ்ரீஜித் மோகன் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியில் சுமார் 120 பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.