நடப்பாண்டில் (2025) பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான பிரதமர் விருது வழங்கும் திட்டத்தை மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இன்று (01.07.2025) அறிவித்துள்ளது.
பிரதமரின் விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பதிவு செய்வதற்கும், சமர்ப்பிப்பதற்குமான இணையதளம் 2025 அக்டோபர் 2-ம் தேதி முதல் முறையாகத் தொடங்கப்படும், அதன் பிறகு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம்.
இந்த விருதுத் திட்டம் இந்தியா முழுமையான வளர்ச்சியை எட்டுவதை ஊக்குவிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தரவு, ஆவண ஆதாரங்களின் தொகுப்பு கூட்டாக மதிப்பீடு செய்யப்படும். 11 முன்னுரிமைத் துறை திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான நல்லாட்சி அம்சங்களில் இது கவனம் செலுத்துகிறது.
சிறந்த நடைமுறைகளின் கீழ் ஆக்கபூர்வமான போட்டி, புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் நிறுவனமயமாக்கலை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். நல்லாட்சி, சிறப்பான சாதனை மற்றும் கடைக்கோடிவரை இலக்கை அடைதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தனிப்பட்ட பயனாளிகள் மற்றும் நிறைவான அணுகுமுறையுடன் செயல்படுத்தல் உள்ளிட்ட இலக்குகளைக் கொண்டு மாவட்ட ஆட்சியரின் செயல்திறனை அங்கீகரிப்பதை இந்த ஆண்டுக்கான விருது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் நல்லாட்சி, தரம் மற்றும் அளவு அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதுகள் 2025 திட்டத்தில் அனைத்து மாவட்டங்களும் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதுகளுக்கான திட்டம் மூன்று பிரிவுகளின் கீழ் அரசு ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது:
பிரதமரின் விருதுகள், 2025 திட்டத்தில் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டம், அமைப்புகளுக்கு கோப்பையுடன் 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
Matribhumi Samachar Tamil

