Sunday, January 05 2025 | 07:07:07 AM
Breaking News

2025 ஜனவரி மாதத்தில் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆய்வுகள் தொடக்கம்

Connect us on:

மத்திய அரசின் புள்ளியியல் – திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2025 ஜனவரி முதல் பின்வரும் ஆய்வுகள், கணக்கெடுப்புகளை நடத்துவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது:-

*என்எஸ்எஸ் 80 வது சுற்று: சமூக நுகர்வு- சுகாதாரம் ஆய்வு (ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரை)

*விரிவான தொலைத்தொடர்பு திறன் ஆய்வு(ஜனவரி முதல் மார்ச் 2025 வரை)

*கல்வி (ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரை);

*குறிப்பிட்ட கால இடைவெளியிலான தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) (ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரை)

*சட்டப்படி ஒருங்கிணைக்கப்படாத தொழில்கள்  குறித்த வருடாந்திர ஆய்வு (ASUSE) (ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரை)

மாவட்ட அளவிலான மதிப்பீடுகள் , தொழிலாளர் தொடர்பான மாதாந்திர கணக்கீடுகள், ஊரகப் பகுதியில் தொழிலாளர் குறித்த காலாண்டு மதிப்பீடுகள், ஆண்டு மதிப்பீடுகள்  ஆகியவற்றை உள்ளடக்கி இந்த ஆய்வுகளின் மாதிரி வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான மதிப்பீடுகளை உருவாக்குவதற்கான ஒரு ஏற்பாடாக, ஜனவரி 2025 முதல் தொடங்கும் அனைத்து கணக்கெடுப்புகளுக்கும் ஒரு அடிப்படை அடுக்காக மாவட்டத்துடன் மாதிரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மாதிரி வடிவமைப்பை என்எஸ்ஓ மாற்றியுள்ளது. இந்த முயற்சியில், மாநில, தேசிய அளவிலான மதிப்பீடுகளை உருவாக்குவதற்கு பொறுப்பான ஒருங்கிணைப்பு முகமையாக மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சகம் செயல்படும். அதே நேரத்தில் அந்தந்த மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களுக்கான மாவட்ட அளவிலான மதிப்பீடுகளை தயாரிக்கும்.

அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட மாதிரி நுட்பத்தின் அடிப்படையில் கணக்கெடுப்புக்கான குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

என்எஸ்ஓ-வின் நன்கு தகுதி வாய்ந்த பயிற்சி பெற்ற அதிகாரிகள் / கணக்கெடுப்பு கணக்கீட்டாளர்கள் இ-சிக்மா மென்பொருள் பொருத்தப்பட்ட டேப்லெட்டுகளைப் பயன்படுத்தி தகவல்களைச் சேகரிக்கிறார்கள்.

About Matribhumi Samachar

Check Also

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு விரேந்திர குமார்

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று மையத்தை மத்திய சமூக …