Saturday, January 31 2026 | 06:18:10 PM
Breaking News

பத்ம விருதுகள் – 2026-க்கான பரிந்துரைகளை 2025 ஜூலை 31 வரை அனுப்பலாம்

Connect us on:

2026 குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பது 2025, மார்ச் 15 அன்று தொடங்கியது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி நாள் 2025 ஜூலை 31 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in) வாயிலாக மட்டுமே பெறப்படும்.

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் மிக உயர்ந்த குடிமை விருதுகளாகும். 1954-ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. இந்த விருது ‘சிறப்புப் பணிகளை’ அங்கீகரிக்கிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு சாதனைகள் புரிந்ததற்காக வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்குத் தகுதியுடையவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதில்லை.

பத்ம விருதுகளை “மக்கள் பத்ம” விருதாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, அனைத்து குடிமக்களும், சுய  பரிந்துரை உள்ளிட்ட பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 இது தொடர்பான விவரங்களை  உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://mha.gov.in) ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பின் கீழ் மற்றும் பத்ம விருதுகள் இணையப்பக்கத்தில் (https://padmaawards.gov.in)காணலாம். இந்த விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணைப்பில் இணையதளத்தில் உள்ளது.

About Matribhumi Samachar

Check Also

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசு துணைத்தலைவர் திரு …