Monday, January 06 2025 | 01:44:18 AM
Breaking News

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) 67-வது நிறுவன தினத்தை போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கொண்டாடுகிறது

Connect us on:

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் 67-வது  நிறுவன தினத்தை போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(சி.வி.ஆர்.டி.இ )   இன்று (2025-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி) ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கொண்டாடப்பட்டது. டிஆர்டிஓ ஆர் & டி செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், புது தில்லியில் உள்ள எஸ் கோத்தாரி அரங்கத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். மேலும் இந்த முழு நிகழ்ச்சியும் சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் அர்ஜுன் அரங்கத்தில், நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. டி.ஆர்.டி.ஓ அமைப்பின் தலைவர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டிடி ஆர் & டி அமைப்பின் செயலாளர் 2024-ம் ஆண்டில் அடைந்த முக்கிய சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் நாட்டின் எதிர்கால சவால்களை சமாளிக்கவும், பிரதமரின் “தற்சார்பு இந்தியா” தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் வகையிலும், தனியார் தொழில் துறையினருடன் இணைந்து முக்கிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் டிஆர்டிஓ கவனம் செலுத்த வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார்.

டிஆர் டிஓ  அமைப்பின் செயலாளர்   உரையாற்றிய பிறகு, சி.வி.ஆர்.டி.இ.யின் சிறந்த விஞ்ஞானியும், இயக்குநருமான திரு ஜே.ராஜேஷ்குமார், மூத்த விஞ்ஞானிகள் / அதிகாரிகளுடன் அர்ஜுன் அரங்கத்தில் எல்.டி (ஜோராவார்)-ன் ஸ்கேல் டவுன் மாதிரியை வெளியிட்டார்.  சி.வி.ஆர்.டி.இ இயக்குநர் ஆற்றிய தலைமை உரையில், அடுத்த 10 ஆண்டுகளில் சி.வி.ஆர்.டி.இ-ன் செயல்பாடுகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொண்டார். ஏ.எஃப்.வி.களின் அமைப்புகள் / துணை அமைப்புகள் / கூறுகளின் உள்நாட்டுமயமாக்கலில் வளர்ச்சியின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பாலைவனப்பகுதிகள் உயரமான மலைப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்ட குழு உறுப்பினர்களையும் அவர் பாராட்டினார்.

சி.வி.ஆர்.டி.இ விழாக்குழு மற்றும் 22-வது பணிக்குழு சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

     

About Matribhumi Samachar

Check Also

டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்

அறிமுகம் டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகள் மக்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கும்  உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. …