Saturday, January 31 2026 | 06:54:50 AM
Breaking News

டாக்டர் மன்சுக் மாண்டவியா ‘நகர்ப்புறம் குறித்த கலந்துரையாடல் 2025-ஐ தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டுதல் குறித்த சிறப்புப் புத்தகங்களை வெளியிட்டார்

Connect us on:

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று புதுதில்லியில் நகர்ப்புறம் குறித்த கலந்துரையாடல் 2025 மாநாட்டைத் தொடங்கி வைத்தார். நிலையான நகர்ப்புற எதிர்காலத்தை உருவாக்க இளையோர்கள், நிபுணர்கள் மற்றும் தலைவர்களை ஒன்றிணைப்பதை மூன்று நாள் மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

அப்போது பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, சைக்கிள் ஓட்டுதல் என்பது உடற்பயிற்சியின் சிறந்த வடிவம் என்றும் அது நம்மை ஆரோக்கியமாக்குவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் உதவுகிறது என்றும் தெரிவித்தார். சைக்கிள் ஓட்டுதல் மாசுபாட்டிற்கான தீர்வாகும் என்றும் அவர் கூறினார்.

தனது கடந்த கால அனுபவத்தை விரிவாகக் கூறிய மத்திய அமைச்சர், “தான் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபோது, ​​தான் ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்திற்கு மிதிவண்டியில் சென்றதாக தெரிவித்தார். நாம் சைக்கிள் ஓட்டுதலை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் அது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே என்ற கருத்தை அகற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அப்போதுதான் சைக்கிள் ஓட்டுதல் அனைவருக்கும் விருப்பமாக மாறும்” என்று கூறினார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் என்ற முயற்சி, ஃபிட் இந்தியா இயக்கத்தை ஊக்குவிப்பதற்கான நாடு தழுவிய இயக்கமாக மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

உலக சைக்கிள் தினத்துடன் இணைந்து, இந்த நிகழ்வின் போது, ​​டாக்டர் மாண்டவியா இரண்டு முக்கிய வெளியீடுகளை வெளியிட்டார்.

டாக்டர் பைரவி ஜோஷி எழுதிய சைக்கிள் ஓட்டுதல், குழந்தைகள் & நகரங்கள் மற்றும் டாக்டர் பைரவி ஜோஷி, ஆர். குஷ் பாரிக் ஆகியோர் எழுதிய ரோட் 2 சைக்கிள் 2 ஸ்கூல் ஆகியவை  அவர் வெளியிட்ட புத்தகங்களாகும்.

 

About Matribhumi Samachar

Check Also

ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರು ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ ʻ72ನೇ ರಾಷ್ಟ್ರೀಯ ವಾಲಿಬಾಲ್ ಪಂದ್ಯಾವಳಿʼಯನ್ನು ವಿಡಿಯೋ ಕಾನ್ಫರೆನ್ಸ್‌ ಮೂಲಕ ಉದ್ಘಾಟಿಸಿದರು

ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿ ಅವರು ಇಂದು ಉತ್ತರ ಪ್ರದೇಶದ ವಾರಣಾಸಿಯಲ್ಲಿ 72ನೇ ರಾಷ್ಟ್ರೀಯ ವಾಲಿಬಾಲ್ ಪಂದ್ಯಾವಳಿಯನ್ನು ವಿಡಿಯೋ ಕಾನ್ಫರೆನ್ಸಿಂಗ್ …