Saturday, March 21 2026 | 05:56:35 AM
Breaking News

அறிவியல் ஆசிரியர்களுக்கு “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” குறித்த இரண்டு நாள் வழிகாட்டிப் பயிற்சித் திட்டம் – புதுச்சேரியில் இந்திய தரநிர்ணய அமைவனம் நடத்தியது

Connect us on:

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை அலுவலகம் அறிவியல் ஆசிரியர்களுக்கு, “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் வழிகாட்டி பயற்சித் திட்டத்தை புதுச்சேரியில் நடத்துகிறது. இது இன்றும் (03.07.2025)  நாளையும் (04.07.2025) நடத்தப்படுகிறது.

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் இணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு ஸ்ரீஜித் மோகன், பங்கேற்பாளர்களை வரவேற்று, திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். “தரநிலைகள் மூலம் அறிவியல் கற்றல்” என்பது, அடிப்படை அறிவியல் கருத்துக்களை தரப்படுத்தல் நடைமுறைகளுடன் இணைப்பதன் மூலம் மாணவர்களின் அறிவியல் புரிதலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சி என்று அவர் கூறினார்.

இரண்டு நாள் நிகழ்ச்சியின் போது பல்வேறு பயிற்சி அமர்வுகள் நடைபெறுகின்றன. பிஐஎஸ்-ன் முக்கிய செயல்பாடுகள்,  தரப்படுத்தல், சான்றிதழ், சோதனை, பயிற்சி, கல்வி ரீதியான தொடர்பு ஆகியவை  தொடர்பான கண்ணோட்டங்கள் இந்த அமர்வுகளில் இடம் பெறும்.

மொத்தம் 35 அறிவியல் ஆசிரியர்கள் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நாளை மாலையில் (04.07.2025) நிறைவடையும்.

About Matribhumi Samachar

Check Also

சென்னையில் தொடங்கிய “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி (Let’s Goa 2026 Rickshaw Rally)”

சென்னை,மார்ச் 2: இங்கிலாந்தைச் சேர்ந்த 35 பெண்தொழில்முனைவோர் பங்கேற்ற “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி  (Let’s Goa 2026 …