அனைத்து பான் மசாலா பொட்டலங்களிலும் சில்லறை விற்பனை விலையை கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் விவகாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான சட்ட அளவீட்டு (பொட்டலப் பொருள்கள்) இரண்டாவது (திருத்தம்) விதிகள், 2025 அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட விதிகள் 2026 பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன. 10 கிராம் அல்லது அதற்குக் குறைவான சிறிய பொட்டலங்களுக்கு முன்பு விலைக் குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், புதிய விதியின்படி அனைத்துச் சிறிய பான் மசாலா பொட்டலங்கள் உட்பட அனைத்துக் கட்டாய அறிவிப்புகளையும் அச்சிட வேண்டும்.
இந்த நடவடிக்கை மூலம், அனைத்துப் அளவுள்ள பொட்டலங்களிலும் வெளிப்படையான விலைத் தகவலை உறுதி செய்வதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது. மேலும், பான் மசாலாவுக்கு சில்லறை விற்பனை விலையை அடிப்படையாகக் கொண்ட ஜிஎஸ்டி வரியைச் சீராக அமல்படுத்தி, வரி வருவாயை முறையாக வசூலிக்கவும் இந்த உத்தரவு உதவும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
Matribhumi Samachar Tamil

