Wednesday, December 31 2025 | 06:22:32 PM
Breaking News

நாடு முழுவதும் 100 கல்வி நிறுவனங்களில் 5ஜி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது

Connect us on:

நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5ஜி நெட்வொர்க்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

 தற்போது, நாட்டின் 99.9 சதவீத மாவட்டங்களில் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. அக்டோபர் 31, 2025 நிலவரப்படி, 5.08 லட்சம் 5ஜி கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை துல்லியமான விவசாயம், தொலைதூரக் கல்வி மற்றும் தொலை மருத்துவசேவை போன்ற பயன்பாடுகளுக்கு வேகமான இணைய சேவைகளை வழங்குகின்றன.

5ஜி சேவைகளைப் பரப்புவதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் 5ஜி அலைக்கற்றை ஏலம், வங்கி உத்தரவாதம் மற்றும் வட்டி விகிதங்களைச் சீரமைத்தல் போன்ற நிதி சீர்திருத்தங்கள் அடங்கும். மேலும், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவலை எளிதாக்க, விரைவு சக்தி சஞ்சார் போர்ட்டல் மற்றும் புதிய வழித்தட அனுமதி விதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, பல்வேறு சமூகப் பொருளாதார 5ஜி பயன்பாடுகளை உருவாக்கவும், நாட்டிற்குத் தேவையான 6ஜி தயாரான கல்வி மற்றும் ஸ்டார்ட்-அப் சூழலை உருவாக்கவும், இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் 100 5ஜி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதனை மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின் தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது

2026-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின், (தாள் -5) தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு …