Wednesday, December 10 2025 | 07:55:10 AM
Breaking News

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் டிசம்பர் 3 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

Connect us on:

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 11 வரை நடைபெறுகிறது.

2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,88,77,172 கணக்கெடுப்பு படிவங்கள் (99.83%) இதுவரை (2025 டிசம்பர் 3) விநியோகிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்காக 5,32,828 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், 12,43,201 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் 47,54,59,164 கணக்கெடுப்பு படிவங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,38,66,001 கணக்கெடுப்பு படிவங்கள் (99.61%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6,16,95,034 கணக்கெடுப்பு படிவங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 68,470 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,46,069 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 10,19,216 படிவங்கள் (99.77%) விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 9,93,631 கணக்கெடுப்பு படிவங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

About Matribhumi Samachar

Check Also

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையொட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையெட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். …