Saturday, December 06 2025 | 03:06:50 AM
Breaking News

தமிழ்நாட்டின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் மத்திய அரசின் நிதிசார் திட்டங்கள் குறித்த சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறுகின்றன

Connect us on:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் சமூக மேம்பாட்டுக்கான பல்வேறு நிதிசார் திட்டங்கள் குறித்த சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்துவருகின்றன. ஜூலை 1 முதல் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இம்முகாம்களில் பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் திருத்தங்கள் செய்வது, பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம், பிரதமரின் சுரக்‌ஷா பீமா திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் கேஒய்சி சான்றிதழ்களை புதுப்பித்தல், வாரிசுதாரர்களை இணைத்தல், உரிமை கோரல் விண்ணப்பங்களை சமர்பித்தல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளரும் மாநில அளவிலான வங்கிகள் குழுவின் அமைப்பாளருமான திருமதி என் விஜயா இந்த சிறப்பு முகாம்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்த 3 மாத கால சிறப்பு முகாம்கள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகளுக்கான அட்டவணைகள் இறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களின் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. மொத்தமுள்ள      12,525 கிராமப் பஞ்சாயத்துக்களில் இந்த சிறப்பு முகாமை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, கடந்த ஒரு மாத காலத்தில் அதாவது ஆகஸ்ட் 1-ம் தேதி வரை 5,230 கிராமப் பஞ்சாயத்துக்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்களில் வழங்கப்பட்ட சேவைகளின் விரிவான தகவல்கள் பின்வருமாறு

  1. பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ், 1,06,567 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 85,507 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
  2. பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து கிராமப் பஞ்சாயத்துக்களிலும் 90 நாட்களில் 16,05,632 விண்ணப்பங்களுக்கு தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 1,56,157 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 1,10,729 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
  3. பிரதமரின் சுரக்‌ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 3 மாதங்களுக்குள் 22,17,814 விண்ணப்பங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலத்தில் 2,10,110 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 1,64,771 விண்ணப்பங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
  4. அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 3 மாத கால சிறப்பு முகாம் வாயிலாக மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் 2,37,148 விண்ணப்பங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 30 நாட்களில் 60,906 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 43,499 விண்ணப்பங்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன.
  5. வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) என்ற நடைமுறையை மீண்டும் புதுப்பிப்பதற்கான செயல்பாடுகள் மூலம் பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் இதுவரை 47,997 வாடிக்கையாளர்களின் சுய விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதர திட்டங்களின் கீழ் 60,853 வாடிக்கையாளர்களின் சுயவிவரங்கள் மீண்டும் புதுபிக்கப்பட்டுள்ளன.
  6. பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் 34,408 வாடிக்கையாளர்களுக்கு வாரிசுதாரர் நியமனம் செய்வதற்கான  நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதர திட்டங்களின் கீழ் 33,247 வாடிக்கையாளர்களுக்கு வாரிசுதாரர் நியமனம் நிறைவடைந்துள்ளது.
  7. காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் காப்பீட்டு உரிமைத் தொகை கோரிப் பெறப்பட்ட 182 விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு காப்பீட்டுத் தொகை (ரூ. 2 லட்சம்) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நிதிசார் நலத்திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இத்தகைய திட்டங்களின் பயன்கள் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துணைப் பொது மேலாளர்கள் திரு அதுல் சிங், திரு தீபக் குமார் திரிபாதி மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குநர் திருமதி விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

மண்டல சுற்றுச்சூழல் மாநாடு – டிசம்பர் 6, 7 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது

சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் சார்பில் 2025 டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் …