மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு மின் சந்தை தளம், பாதுகாப்புத் துறை கணக்கு சேவைகள் பிரிவு பயிற்சி அதிகாரிகளுக்கு, அரசு மின் சந்தை தளம் எனப்படும் ஜெம் மூலம் பொது கொள்முதலை அதிகரிப்பது தொடர்பான வழிகாட்டுதல் அமர்வைப் புதுதில்லியில் நடத்தியது.
அரசு மின் சந்தை தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு மிஹிர் குமார் தமது உரையில், டிஜிட்டல் முறையிலான கொள்முதல் என்பது வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதற்கு முக்கியமானது என்று கூறினார். கொள்முதல் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதைத் தாண்டி, அரசு மின் சந்தை தளம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இது முடிவெடுப்பதை விரைவாகவும், தரவு சார்ந்ததாகவும் மாற்றும் என அவர் கூறினார். பாதுகாப்புத் துறையில் இந்த மாற்றத்தை விரைவுபடுத்துவதில் பாதுகாப்புத் துறை கணக்கு சேவைகள் பிரிவு வல்லுநர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஜெம் தளத்தின் விரிவான நடைமுறைகள் குறித்த செயல் விளக்கமும், கலந்துரையாடல்களும் இதில் இடம்பெற்றன. பாதுகாப்புத் துறை நிறுவனங்களுடனான தனது ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பயிற்சி மற்றும், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் கொள்முதல் தொடர்பான அதிகாரிகளின் திறன் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் அரசு மின் சந்தைத் தளம் உறுதிபூண்டுள்ளது.
Matribhumi Samachar Tamil

