புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் இணையதளத்தில் பன்மொழி செயல்பாட்டை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வு காணும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த இணையதளம் செயல்படுகிறது. இதில் அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் காணலாம். முக்கிய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர், துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விரிவான சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கான மத்திய அரசின் முயற்சிகளில் மற்றொரு மைல்கல்லாகும்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் பாஷினி திட்டம் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளுடன் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான இணையதளத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பில் ஆங்கிலம், இந்தி, கன்னடம், மராத்தி மொழிகளில் மட்டுமே இந்த மென்பொருள் கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மாண்டவியா, இந்த இணையதளத்தில் வளர்ந்து வரும் நம்பிக்கையை எடுத்துரைத்தார், அமைப்புசாரா தொழிலாளர்களால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30,000- க்கும் மேற்பட்ட பதிவுகளை இந்தஇணையதளம் மூலம் பதிவு செய்ய முடியும் என்று கூறினார். அனைத்து தொழிலாளர்களும் தங்களது நலன், வாழ்வாதாரம், நலவாழ்வை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் வாயிலாக மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களைப் பெற பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.