இந்த ஆண்டு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க, குடியரசுத்தலைவரின் அலுவலகம் மூலம் நாட்டின் பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 250 புகழ் பெற்ற விருந்தினர்கள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு அழைப்பிதழ் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் விரைவு தபால் மூலம் பட்டுவாடா செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் அலுவலகத்தில் இருந்து, மத்திய அஞ்சல் மண்டலம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த திரு. பொன்னையா, புதுக்கோட்டை மாவட்டம் கேசராப்பட்டியை சேர்ந்த திருமதி அமுதா அவர்களுக்கு இந்த அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இன்று மேற்பார்வை அதிகாரியுடன் அஞ்சல் துறை ஊழியர் மூலம் இருவருக்கும் அந்த அழைப்பிதழ் பட்டுவாடா செய்யப்பட்டது. திரு பொன்னையா அவர்கள் சிறந்த விவசாயியாகவும், நீர்வள சங்கத்தின் விருது பெற்றவராக உள்ளார். திருமதி. அமுதா அவர்கள் நமோ ட்ரோன் சகோதரி பயனாளி ஆவார்.
குடியரசுத்தலைவரிடம் இருந்து குடியரசு தின விழா 2025-ல் பங்கேற்க அழைப்பைப் பெற்றதற்கும், நேற்று குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்பிதழ் இன்று விநியோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அஞ்சல் துறையின் உடனடி சேவைக்கு அழைப்பாளர்கள் இருவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.