விவசாயிகளுக்கு உதவுவதற்காக விவசாயத் துறையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு முறைகளை அரசு பயன்படுத்தியுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்க முன்முயற்சிகள் பின்வருமாறு:
* கிசான் இ-மித்ரா’: செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட சாட்போட் சேவை, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் குறித்த கேள்விகளுக்கு விவசாயிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்வு பல மொழிகளை ஆதரிக்கிறது மற்றும் பிற அரசுத் திட்டங்களுக்கு உதவும் வகையில் உருவாகி வருகிறது.
* தேசிய பூச்சித் தொல்லை கண்காணிப்பு அமைப்பு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைபொருட்களின் இழப்பைச் சமாளிப்பதற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தி, பயிர்களில் ஏற்படும் பிரச்சனைகளில் பூச்சித் தொல்லைகளைக் கண்டறிந்து, ஆரோக்கியமான பயிர்களுக்கு சரியான நேரத்தில் தலையீடு செய்ய உதவுகிறது.
* செயற்கைக்கோள், வானிலை மற்றும் மண்ணின் ஈரப்பதம் தரவுத்தொகுப்புகளைப் பயன்படுத்தி அரிசி மற்றும் கோதுமைக்கு பயிர் சுகாதார மதிப்பீடு மற்றும் பயிர் சுகாதார கண்காணிப்பு ஆகியவற்றிற்கான களப் புகைப்படங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பகுப்பாய்வு.
இந்தத் தகவலை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
Matribhumi Samachar Tamil

