சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் ‘அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று 2.0’ பிரச்சாரத்தை நினைவுகூரும் விதமாகவும் ஃபரிதாபாத்-நொய்டா சர்வதேச விமான நிலைய வழித்தடத்தில் சுமார் 17,000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஒரு இயக்கத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உத்தரபிரதேசத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் உள்ள ஃபரிதாபாத்-நொய்டா சர்வதேச விமான நிலைய சாலையில் உள்ள யமுனா விரைவுச்சாலை சந்திப்புப் பகுதியில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இணை அமைச்சர் திரு அஜய் தாம்தா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோருடன் இணைந்து, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ், மற்றும் உயர் அதிகாரிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்த தகவல எடுத்துரைக்கும் வகையில் பள்ளி மாணவர்களும் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, “பெருமளவிலான மாசு சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வருகிறது என்றும், இதைக் குறைப்பது நமது முதன்மையான பொறுப்பு என்றும் தெரிவித்தார். எத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும், பெரிய அளவிலான தோட்டக்கலை இயக்கங்களை மேற்கொள்வதும் மிகவும் பயனுள்ள தீர்வுகள் என்று கூறிய அவர், மேலும் நாம் இரண்டையும் தீவிரமாகப் பின்பற்றுகிறோம் என்று தெரிவித்தார். சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக, சாலை கட்டுமானத்தில் கழிவுகளை திறம்பட பயன்படுத்துகிறோம் என்றும், மேலும் சாலை கட்டுமானத்தில் சுமார் 80 லட்சம் டன் கழிவுகளைப் பயன்படுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார். நமது நெடுஞ்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நீர் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்து வருகிறோம் என்று அவர் கூறினார். ‘அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று’ என்பது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு மிகவும் உன்னதமான முயற்சியாகும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 5 கோடி மரக்கன்றுகளை நடுவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தை தாம் வாழ்த்துவதாகவும் திரு நிதின் கட்கரி கூறினார்.
Matribhumi Samachar Tamil

