Saturday, September 26 2026 | 05:43:57 PM
Breaking News

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

Connect us on:

தொலைத்தொடர்புத்துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகள் குறித்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மறுஆய்வு தகவல்கள் அடங்கிய ஆவணத்தை கடந்த மாதம் (நவம்பர் 2025) 10-ம் தேதி ட்ராய் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை  இம்மாதம் (டிசம்பர் 2025) 8-ம் தேதிக்குள்ளும் அது தொடர்பான விமர்சனங்களை இம்மாதம் (டிசம்பர் 2025) 22-ம் தேதிக்குள்ளும் எழுத்து மூலம் சமர்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தொழில்துறை சங்கங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் முறையே இம்மாதம் (டிசம்பர் 2025) 15-ம் தேதி மற்றும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு விதிமுறைகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை மின்னணு முறையில் ட்ராய் அமைப்பின் (வலைதளம், அலைக்கற்றை, உரிமம்) ஆலோசகர் திரு சமிர் குப்தாவிற்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், அதன் நகலை [email protected] என்ற முகவரியிலும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஏதேனும் விளக்கங்கள் மற்றும் தகவல்களை பெற ட்ராய் ஆலோசகர் திரு சமிர் குப்தாவின் தொலைபேசி எண்ணை (+91-11-20907752) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

வங்கி வேலைநிறுத்தம்: செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் இயங்கும் – ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு!

ஒருங்கிணைந்த வங்கிச் சங்கங்கள் கூட்டமைப்பு (UFBU) அறிவித்துள்ள 3 நாள் வேலைநிறுத்தம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களைக் கருத்தில் …