Thursday, February 19 2026 | 06:56:25 PM
Breaking News

பால் உற்பத்தியாளர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு

Connect us on:

கால்நடை மற்றும் பால்வளத் துறை, பால் உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கால்நடை பராமரிப்பிற்கான  உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ஆகிய இரண்டு முக்கிய உள்கட்டமைப்பு  வசதிகள் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுவதற்கான உள்கட்டமைப்பு  வசதிகளை உருவாக்குதல், வலுப்படுத்துதல், தரமான பால் தரம் குறித்த பரிசோதனைகளுக்கான உபகரணங்களை நிறுவுதல், பெரிய அளவிலான பால் குளிரூட்டும் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு, கிராம அளவிலான பால் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவி வழங்கப்படுகிறது. இதில் சூரிய ஒளிமின்னழுத்த அமைப்புகள் மற்றும் வெப்ப சேமிப்பு அமைப்புகள் மூலம் இயக்கப்படும் அமைப்புக்களும் அடங்கும். சூரிய சக்தியில் இயங்கும் 52  பெரிய அளவிலான பால் குளிரூட்டும் கட்டமைப்புகளை உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையின் கீழ், பால் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவுதல், நவீனமயமாக்குதல், குளிரூட்டும் உள்கட்டமைப்பு வசதிகள், மதிப்பு கூட்டப்பட்ட பால் உற்பத்திக்கான அலகுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி / எரிசக்தி உற்பத்திக்கான செயல்திறன் அமைப்புகள் ஆகியவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தி அமைப்புக்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தனியார் தொழில்முனைவோர் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மின்சார வசதி மற்றும் அதன் செயலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை நீக்குவதற்கும் உதவுகிறது. சூரிய மின் சக்தியில் இயங்கும் பால் பதப்படுத்தும் அலகுகளுக்கு பராவுனி (பீகார்), பனஸ்கந்தா (குஜராத்) மற்றும் எர்ணாகுளம் (கேரளா) ஆகிய மூன்று பால் தொழிற்சங்கங்கள் உதவியுள்ளன.

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்துள்ள மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் புது தில்லியில் 4-வது நிறுவன ஆண்டு விழாவைக் கொண்டாடியது

பாரம்பரிய மருத்துவப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சியாக, ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று …