Thursday, January 01 2026 | 10:25:22 PM
Breaking News

ஐநா தரவு அறிவியல் நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்தது

Connect us on:

ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக  அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கான  பெருந்தரவு  மற்றும் தரவு அறிவியல்  குறித்த மதிப்புமிக்க ஐ.நா நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்துள்ளது. பெருந்தரவு மற்றும் தரவு அறிவியலுக்கான அதிகாரப்பூர்வ புள்ளியியல்  பற்றிய ஐநா நிபுணர்களின் குழு, பெருந்தரவின்  நன்மைகள் மற்றும் சவால்களை மேலும் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது, இதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணித்து அறிக்கையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும்.

ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளிக்குப் பிறகு ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் கவுன்சிலில் இந்தியா சமீபத்தில் உறுப்பினராக இருப்பதால், இந்த நிபுணர் குழுவில் சேர்க்கப்படுவது ஒரு முக்கிய நேரத்தில் வருகிறது. நிபுணர்கள் குழுவில் இந்தியா இடம்பெற்றிருப்பது, நாட்டின் புள்ளியியல் சூழலுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. குழுவின் ஒரு பகுதியாக, அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நோக்கங்களுக்காக பெரிய தரவு மற்றும் தரவு அறிவியலைப் பயன்படுத்துவதில் உலகளாவிய தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை வடிவமைப்பதில் இந்தியா பங்களிக்கும். இந்த மைல்கல், உலகளாவிய புள்ளிவிவர சமூகத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் தகவலறிந்த முடிவெடுப்பதற்கு தரவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கான பெருந்தரவு மற்றும் தரவு அறிவியல்  நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைவது, புள்ளியியல் உற்பத்தி மற்றும் பரவலில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு படியாகும். இந்த அங்கீகாரம், தரவு சார்ந்த முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும். உலகளாவிய புள்ளிவிவர நடைமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் திறனை வலுப்படுத்தும்.

About Matribhumi Samachar

Check Also

கிம்பர்லி செயல்முறையின் மதிப்புமிக்க தலைமைப் பொறுப்பை 2026 ஜனவரி 1 முதல் இந்தியா ஏற்கிறது

கிம்பர்லி செயல்முறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அதன் தலைமைப் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிம்பர்லி செயல்முறையின் தலைவராக …