Saturday, January 03 2026 | 12:36:03 PM
Breaking News

ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு மஹந்த் சத்யேந்திர தாஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Connect us on:

ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு மஹந்த் சத்யேந்திர தாஸ் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். மதச் சடங்குகள் மற்றும் வேதங்களில் வல்லுநராக மஹந்த் திகழ்ந்தார் என்றும், அவர் தனது முழு வாழ்க்கையையும் பகவான் ஸ்ரீ ராமரின் சேவைக்காக அர்ப்பணித்தார் என்றும் திரு மோடி பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் திரு மஹந்த் சத்யேந்திர தாஸ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மதச் சடங்குகள் மற்றும் வேதங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற மஹந்த் ஜி, தனது முழு வாழ்க்கையையும் பகவான் ஸ்ரீ ராமரின் சேவைக்காக அர்ப்பணித்தார். நாட்டின் ஆன்மீகம் மற்றும் சமூக வாழ்க்கைக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பு எப்போதும் பயபக்தியுடன் நினைவுகூரப்படும். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கடவுள் வலிமை அளிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!”

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 125 சாலைகளில் ஆய்வு மேற்கொண்டது காற்றுத் தர மேலாண்மை ஆணையம்

குருகிராம் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளின் தூய்மை, பராமரிப்பு போன்றவை தொடர்பாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம்  26.12.2025 அன்று விரிவான …