அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தில் நேரிட்ட ஏராளமான உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பங்களுக்கு அவர் தமது இரங்கலைத் தெரிவித்தார், அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் மகத்தான வலி மற்றும் இழப்பை தான் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவிதாதர்.
இன்று முன்னதாக, அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட திரு மோடி, பேரழிவிற்குப் பிறகு அயராது உழைக்கும் அதிகாரிகள் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர்களைச் சந்தித்தார்.
இதுபற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தனித்தனி பதிவுகளில், திரு மோடி கூறியிருப்பதாவது:
“அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் நாம் அனைவரும் மிகுந்த துயரத்துக்கு ஆளாகியுள்ளோம். திடீரெனவும், இதயத்தை நொறுக்கும் வகையிலும் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. துயரத்தில் ஆழ்ந்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் இழப்பால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் வரும் பல ஆண்டுகளிலும் உணரப்படும் என்பதையும் அறிவோம். ஓம் சாந்தி.”
“இன்று அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டேன். பேரழிவு நடந்த இடம் வருத்தமளிக்கிறது. அதன் பின்னர் அயராது உழைக்கும் அதிகாரிகள் மற்றும் குழுக்களைச் சந்தித்தேன். கற்பனை செய்ய முடியாத இந்த துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன்தான் எங்கள் எண்ணங்கள் உள்ளன.”
भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं
ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)
Matribhumi Samachar Tamil

