Wednesday, March 18 2026 | 02:37:25 PM
Breaking News

ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு – காந்தி நகரில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா தலைமை வகித்தார்

Connect us on:

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா குஜராத்தின் காந்திநகரில் 500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கி, உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி (ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிளிங்) ஓட்டும் நிகழ்வின் 31-வது பதிப்பை வழிநடத்தினார்.  இதேபோல் இந்த நிகழ்வு இன்று (13.07.2025 – ஞாயிற்றுக்கிழமை) காலை நாடு தழுவிய அளவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த வாரம் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வு நாடு முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்வின்போது பேசிய அமைச்சர், ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஒட்டும் நிகழ்வு இப்போது நாடு தழுவிய ஒரு வலுவான முன் முயற்சியாக மாறியுள்ளது என்றார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உடல் திறன் இந்தியா இயக்கத்தை முழு வீச்சில் முன்னெடுத்துச் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இது உடற்பயிற்சி பற்றியது மட்டுமானதாக இல்லாமல் தேசிய அளவில் ஆரோக்கியம் தொடர்பான ஒரு முக்கிய முயற்சியாகவும் மாறியுள்ளது என்று அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா கூறினார்.

இந்த வார மிதிவண்டி ஓட்டும் நிகழ்வுகளில் ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், கெயில், ஹெச்பிசிஎல், பிபிசிஎல், ஆயில் இந்தியா உள்ளிட்ட பல முன்னணி பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தேசிய தலைநகர் புது தில்லியில், மேஜர் தியான் சந்த் மைதானத்தில் கயிறு தாண்டுதல், ஜூம்பா, யோகா நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுடன் கூடிய நிகழ்வாக   ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குர்கானில் நடைபெற்ற நிகழ்வில் 700 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு மிதிவண்டி ஓட்டுதல், யோகா செய்தல் மற்றும் பல விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

டிசம்பர் 2024-ல் தொடங்கப்பட்ட உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் இயக்கம் நாடு முழுவதும் தனிநபர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக 3000-க்கும் மேற்பட்ட மிதிவண்டி ஓட்டும் சங்கங்கள் இணைந்து ஒவ்வொரு வாரமும் இதில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றன. இந்த மிதிவண்டி ஓட்டுதல் பயணங்கள் நாடு முழுவதும் உள்ள பல கேலோ இந்தியா மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள், இந்திய விளையாட்டு ஆணையப் பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா அங்கீகாரம் பெற்ற அகாடமிகள், பிராந்திய மையங்கள், பல்வேறு தேசிய சிறப்பு மையங்கள் போன்றவற்றால் நடத்தப்படுகின்றன.

About Matribhumi Samachar

Check Also

சென்னையில் தொடங்கிய “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி (Let’s Goa 2026 Rickshaw Rally)”

சென்னை,மார்ச் 2: இங்கிலாந்தைச் சேர்ந்த 35 பெண்தொழில்முனைவோர் பங்கேற்ற “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி  (Let’s Goa 2026 …