Sunday, December 07 2025 | 02:14:26 PM
Breaking News

நாடு முழுவதும் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க மை பாரத் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Connect us on:

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் நலத்துறையின்கீழ் செயல்படும் மை பாரத் அமைப்பு அறிவுப்பகிர்தல், திறன் கட்டமைப்பு, இளைஞர் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் இணைந்து செயலாற்றுவதற்காக அல்ட்டிமேட் லீடர்ஷிப் பவுண்டேஷன் பள்ளியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

நாடு முழுவதும் 18-29 வயதுப் பிரிவினரில் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை செயலாக்க உதவும் வகையில் இந்தக் கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆளுகை, பொதுக்கொள்கை, சமுதாயத் தொழில்முனைவு, டிஜிட்டல் கல்வியறிவு, நிதிசார் கல்வியறிவு ஆகியவற்றில் கூட்டுச் செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலின் கீழ் இதன் காலம் நீட்டிக்கப்படலாம்.

தலைமைத்துவ செயல்திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துதல், மாநாடுகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துதல், கூட்டாக இணைந்து ஆய்வு மேற்கொள்ளுதல், இளைஞர்களுக்காக சேவை ஆற்றும் நிறுவனங்களுக்கு திறன் கட்டமைப்பு பயிற்சி அளித்தல் ஆகியவற்றை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட தொடர்பு இடங்களில் மற்றும் கூட்டு பணிக்குழுக்கள் மூலமாக கீழ்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:

•     தலைமைத்துவ மேம்பாட்டிற்காக இளையோர் மாநாடுகள் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தப்படும்.

•     இளைஞர்களுக்கு சேவையாற்றும் நிறவனங்கள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு திறன் கட்டமைப்பு பயிற்சி அளிக்கப்படும்.

•     இளையோர் தலமைத்துவத்தில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

•     இளையோர் தலைமைத்துவம் மற்றும் திறன் கட்டமைப்பில் சிறந்த நடைமுறைகள் பரவலாக்கப்படும்.

•     மைபாரத் மற்றும் அல்ட்டிமேட் லீடர்ஷிப் பவுண்டேஷன் பள்ளி இடையே பயிற்சியாளர்கள், நிபுணர்கள் ஆகியோர் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள்.

•     பயிற்சிக்கான கருவிகள், பாடத்திட்டம், மதிப்பீடு செய்தல் ஆகியன மேம்படுத்தப்படும்.

•     நாடு முழுவதும் இளம் தலைவர்களை இணைப்பதற்காக நெட்வொர்க்கிங் முயற்சி மேற்கொள்ளப்படும்.

•     தகுதி அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையில் ஆன்லைனில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் நாட்டின் இளைஞர்களுக்கு ஆன்லைன் மூலம் தலைமைத்துவத் திறன்களில் பயிற்சி அளிக்கும் செயல்திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும்.

About Matribhumi Samachar

Check Also

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான டாக்டர் அம்பேத்கரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் தேசியப் பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதிலும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதிலும் டாக்டர் அம்பேத்கரின் அர்ப்பணிப்பிலிருந்து நமது தலைமுறைகள் உத்வேகம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த  பாரதத்தைக் கட்டியெழுப்ப நாடு பாடுபடும் போது டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்கள் நாட்டின் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “மகாபரிநிர்வான் தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்கிறேன். அவரது தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசியப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் அவர் நமது தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துள்ளார்.  ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.”