Saturday, December 06 2025 | 06:12:52 PM
Breaking News

இந்த தசாப்தத்தில் முன் எப்போதும் இல்லாத மாற்றத்தின் தூணாக ஆளுகையின் 10 அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன: சென்னையில், மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Connect us on:

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ்கடந்த 10 ஆண்டுகளில்10 அடிப்படைக் கோட்பாடுகள் இந்த தசாப்தத்தில் முன் எப்போதும் இல்லாத மாற்றத்தின் தூணாக இருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். தீர்க்கமான தலைமைமூல காரண பகுப்பாய்வுவிளைவு சார்ந்த நடவடிக்கைசட்டத்தைப் பின்பற்றுதல் மற்றும் வெளிப்படைத்தன்மைகாலக்கெடுவுக்குள் செயல்படுத்துதல்பிரச்சினைகளுக்கு முன்னுரிமைபொறுப்புக்கூறல் மற்றும் கண்காணிப்புதொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதுபுதுமையான நிதி மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் கூட்டாண்மை ஆகியவை அடிப்படைக் கோட்பாடுகளில் அடங்கும். சென்னையில் இன்று நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது  அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவின் எழுச்சி மற்றும் அது எதிர்கொள்ளும் சவால்கள்‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய திரு பியூஷ் கோயல், “தேசம் சந்திக்கும் குறிப்பிடத்தக்க எழுச்சியானதுதெளிவான  கோட்பாடுகளில் வேரூன்றிய மற்றும் 5 ‘டி’களால் (ஜனநாயகம்மக்கள்தொகை ஈவுத்தொகைபன்முகத்தன்மைதேவை சார்பு) இயக்கப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் விளைவு சார்ந்த அணுகுமுறையின் விளைவாகும்”என்று குறிப்பிட்டார்.  10 அடிப்படைக் கொள்கைகள்உலகளாவிய தலைமைபொருளாதாரம்உற்பத்தி மற்றும் முதலீடுகள்கண்டுபிடிப்பு தொழில்முனைவுஉள்கட்டமைப்பு மேம்பாடுஉலகளாவிய மென் சக்தி மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி ஆகிய 6 முக்கிய துறைகளில் இந்தியாவின் எழுச்சிக்கு உந்துதலாக உள்ளனஎன்றார் அவர்.

“உலகளாவிய தலைமைத்துவத்தில் இந்தியாவின் எழுச்சிஉலக அரங்கில் அதன் வளர்ந்து வரும் செல்வாக்குமதிப்புமற்றும் ராஜதந்திரத்திற்கு ஒரு சான்றாகும். பண்டைய இந்திய தத்துவத்தில் வேரூன்றிய இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளான “வசுதைவ குடும்பகம்”திருவள்ளுவரின் ஞானத்துடன் ஆழமாக எதிரொலிக்கிறது. பாரத மண்டபத்தில் உள்ள 27 அடி நடராஜர் சிலை தமிழ்நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது”என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார். உலகளாவிய மென் சக்தியாக இந்தியாவின் எழுச்சி விளையாட்டுகலாச்சாரம் மற்றும் புதுமைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளில் பிரதிபலிக்கிறதுஎன்றார். “தமிழ்நாடுகுறிப்பாக இந்தியாவின் சதுரங்க அதிகார மையமான சென்னைவிஸ்வநாதன் ஆனந்த் போன்ற ஜாம்பவான்களையும் குகேஷ்பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி போன்ற வளர்ந்து வரும் நட்சத்திரங்களையும் நமக்கு அளித்துள்ளது”என்று பெருமிதத்துடன் அவர் கூறினார்.

உணவுஉடைதங்குமிடம்கல்விசுகாதாரம்டிஜிட்டல் இணைப்புவீடுகளில் குழாய் நீர்சமையல் எரிவாயு இணைப்புகள் மற்றும் எரிசக்தி திறன் கொண்ட விளக்கு அமைப்புகள் போன்றவற்றிற்கான உலகளாவிய அணுகல் ஆகியவற்றில் மத்திய அரசின் கவனம்நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவாக மாற்றுவதை உறுதி செய்கிறது என்று அவர் தெரிவித்தார். அரசின் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிடுகையில்திரு பியூஷ் கோயல்நாட்டின் முன் உள்ள சவால்களையும் குறிப்பிட்டார். “நாம்உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கும் அதே வேளையில்நமது ஒற்றுமைபாதுகாப்பு மற்றும் விருப்பங்களை சோதிக்கும் உலகின் வளர்ந்து வரும் யதார்த்தங்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த ஆதாயங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயல்பவர்களிடமிருந்து நமது முன்னேற்றம் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. இருப்பினும்இந்தியாவின் உயர்வுக்கு உந்துதலாக இருந்த அதே நெகிழ்வுதன்மைஇந்தத் தடைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு விழாவில் அறிவிக்கப்பட்ட பிரதமரின் 11 தீர்மானங்களை நினைவுகூர்ந்து திரு பியூஷ் கோயல் தமது உரையை நிறைவு செய்தார். இந்தத் தீர்மானங்கள்அரசியலமைப்பின் உணர்வால் ஈர்க்கப்பட்டுவளர்ந்த பாரதத்திற்கு அடித்தளம் அமைத்தன.

About Matribhumi Samachar

Check Also

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஸ்வராஜ் கௌஷல் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சிறந்த வழக்கறிஞராகவும், விளிம்பு நிலை மக்களின் …