மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26, 2025 வரை பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பன்மொழி அணுகலுக்காக பாஷினியை (Bhashini) ஒருங்கிணைத்து, தொழில்நுட்ப ஆதரவை வழங்கியுள்ளது.
‘டிஜிட்டல் லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் சொல்யூஷன்’ என்ற அம்சத்தின் மூலம் உலகின் மிகப்பெரிய ஆன்மீக கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பாஷினியின் மொழிபெயர்ப்பு சூழல் அமைப்பு உதவுகிறது
பன்மொழி ஆதரவு: சொந்த மொழிகளில் குரலைப் பயன்படுத்தி இழந்த பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யலாம்
சாட்போட் உதவி: வினாக்களுக்கான பன்மொழி சாட்போட்
மொபைல் செயலி / கியோஸ்க் ஒருங்கிணைப்பு: வழிகாட்டுதல்களை உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கிறது
போலீஸ் ஒத்துழைப்பு: அதிகாரிகளுடன் தடையற்ற தகவல்தொடர்பு
பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட கும்ப சாஹய்யாக் என்பது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும், பன்மொழி, குரல் வழி சாட்போட் ஆகும், இது மகா கும்பமேளா 2025-ன் போது கோடிக் கணக்கான பக்தர்களுக்கு உதவ இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
112 அவசர உதவி எண்:
பாஷினி மொபைல் செயலியின் ‘கான்வர்ஸ்’ அம்சம் உத்தரப்பிரதேச காவல்துறையின் 112 அவசர உதவி எண் பிரிவுடன் பக்தர்களுக்கு தடையற்ற தகவல்தொடர்பை எளிதாக்கும். மொழித் தடையை இது குறைக்கும்.