Thursday, January 15 2026 | 06:01:11 AM
Breaking News

மஹாகும்பமேளாவில் பக்தர்களுக்கு தடையற்ற வங்கிச் சேவைகளை வழங்கும் இந்திய அஞ்சல் வங்கி

Connect us on:

மத்திய அரசு நிறுவனமான இந்தியா அஞ்சல் வங்கி, பிரயாகராஜில் நடைபெறும் மஹாகும்பமேளா-2025-ல் கோடிக்கணக்கான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு தடையற்ற டிஜிட்டல் வங்கிச் சேவைகளை வழங்குவதில்  பெரும் பங்காற்றி வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மீக ஒன்று கூடலான, மஹாகும்பமேளாவானது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன், இந்திய அஞ்சல் வங்கி, அனைவருக்கும் விரிவான வங்கிச் சேவைகள் கிடைக்க உதவுகிறது. நிதி பரிவர்த்தனைகளின் வசதி மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மஹாகும்பமேளா முழுவதும் 5 முக்கிய இடங்களில் சேவை கவுண்டர்கள், மொபைல் வங்கி அலகுகள் மற்றும் வாடிக்கையாளர் உதவி ஸ்டால்களை இந்திய அஞ்சல் வங்கி நிறுவியுள்ளது. இந்த வசதிகள் அதிக எண்ணிக்கையிலான மக்களைத் திறம்பட கையாள வகை செய்கிறது.

 “2025 மஹாகும்பமேளாவின் புனிதத் தலமான பிரயாக்ராஜில் எங்கள் தடையற்ற வங்கிச் சேவைகளை வழங்குவதில் இந்தியா அஞ்சல் வங்கியில் உள்ள நாங்கள் பெருமைப்படுகிறோம். உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றான பிரயாக்ராஜில் வங்கிச் சேவைகளின் முழுமையான ஒருங்கிணைப்பைக் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. டிஜிட்டல் மாற்றத்திற்கான ஊக்கியாக எங்கள் பங்கில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம், எங்கள் எளிதான வங்கிச் சேவைகளால் பிரயாக்ராஜில் உள்ள பக்தர்களை மேம்படுத்துகிறோம். இந்த முயற்சி அனைவருக்கும் சேவை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும், நிதி அணுகல் இனி தேர்ந்தெடுக்கப்பட்ட  சிலருக்கு மட்டுமல்லாமல், இந்த மாற்றத்தக்க ஆன்மீகப் பயணத்தின் போது அனைவருக்கும் கிடைக்கும் என்பதை உறுதி செய்கிறது” என்று இந்திய அஞ்சல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆர். விஸ்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி …