உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில், உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தில் இன்று மரம் நடும் இயக்கத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்தது. அன்னையின் பெயரில் மரக் கன்று நடும் இரண்டாம் கட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, தில்லி-டேராடூன் வழித்தடத்தில் சுமார் 40,000 மரக்கன்றுகளை நடுவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. சாலைப் போக்குவரத்து – நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளர் திரு வி. உமாசங்கர், மரக்கன்றுகளை நடும் இயக்கத்தில் முதல் மரக்கன்றை நட்டார்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ், தேசிய நெடுஞ்சாலை ஆணைய மூத்த அதிகாரிகள் இந்த இயக்கத்தில் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனர்.
பாக்பத் மாவட்ட ஆட்சியர் திருமதி அஸ்மிதா லால், காவல் கண்காணிப்பாளர் திரு சூரஜ் குமார் உள்ளிட்ட உள்ளூர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனர்.
தில்லி-டேராடூன் வழித்தடம் தில்லிக்கும் உத்தரகண்டிற்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 40,000 மரக் கன்றுகளை நடுவது, காற்றின் தரத்தை மேம்படுத்தி, மண் அரிப்பைக் குறைத்து பல சுற்றுச்சூழல் நன்மைகளை இந்தப் பகுதிக்கு வழங்கும்.
அன்னையின் பெயரில் மரக்கன்று இடம் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவரை 5,12,000-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நட்டுள்ளது.
Matribhumi Samachar Tamil

