Tuesday, March 31 2026 | 08:38:38 PM
Breaking News

தென் மாநிலங்களில் நுகர்வோர் நீதித் துறை அமைப்பை வலுப்படுத்த, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை சென்னையில் பிராந்தியப் பயிலரங்கை நடத்தியது

Connect us on:

நுகர்வோர் குறை தீர்க்கும் வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் நிறுவன செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை, நேற்று (ஜூன் 13, 2025) சென்னையில் “தென் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நுகர்வோர் பாதுகாப்பு” என்ற தலைப்பில் பிராந்திய பயிலரங்கு ஒன்றை நடத்தியது.

இதில் பங்கேற்று முக்கிய உரையாற்றிய, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் திருமதி நிதி கரே, நுகர்வோர் உரிமை இணையதளத்தை மேம்படுத்துதல்,  தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்துதல் போன்ற முயற்சிகளின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார். இவை நுகர்வோர் குறைகளை விரைந்து தீர்க்க வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார். நுகர்வோர் வழக்குகளுக்கான தீர்வு விகிதங்களில் தென் மாநிலங்களின் முன்மாதிரியான செயல்திறனை அவர் பாராட்டினார்.

2025-ம் ஆண்டில், தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு 5.41 லட்சம் புகார்கள் வந்தன எனவும் இதில் 23% தென் மாநிலங்களிலிருந்து வந்தன என்றும் அவர் தெழிவித்தார்.  இது வலுவான பிராந்திய ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். தேசிய அளவில் தாக்கல் செய்யப்பட்ட 28.54 லட்சம் வழக்குகளில், 5.62 லட்சம் வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன என அவர் கூறினார்.  11,900க்கும் மேற்பட்ட வழக்குகள் மெய்நிகர் நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பயிலரங்கில் நான்கு கருப்பொருள் தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன. நீதித்துறை பிரதிநிதிகள், நுகர்வோர் துறை அதிகாரிகள் இதில் பங்கேற்று உரையாற்றினர்.  தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் திரு சத்யபிரதா சாஹூ, நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனங்களை வலுப்படுத்த திறன் மேம்பாடு, பயிற்சி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.

கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, லட்சத்தீவுகள், புதுச்சேரி, அந்தமான் – நிக்கோபார் தீவுகள் ஆகிய தென் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நுகர்வோர் விவகாரங்கள் துறை அதிகாரிகள், மாநில நுகர்வோர் ஆணைய உறுப்பினர்கள், மாவட்ட ஆணையங்களின் தலைவர்கள், மாவட்ட ஆணையங்களின் உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும், தென் மாநிலங்களைச் சேர்ந்த தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளும் இதில் பங்கேற்றன.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

சென்னையில் தொடங்கிய “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி (Let’s Goa 2026 Rickshaw Rally)”

சென்னை,மார்ச் 2: இங்கிலாந்தைச் சேர்ந்த 35 பெண்தொழில்முனைவோர் பங்கேற்ற “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி  (Let’s Goa 2026 …