Thursday, January 22 2026 | 11:05:27 AM
Breaking News

ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் ஹெய்ம்டெக்ஸ்டில் 2025 ஜவுளி கண்காட்சியில் இந்திய அரங்கை ஜவுளி அமைச்சர் திறந்து வைத்தார்

Connect us on:

மெஸ்ஸே பிராங்பேர்ட்டில் நடைபெறும் ஹெய்ம்டெக்ஸ்டில் 2025 ஜவுளி கண்காட்சியில் இந்திய அரங்கை மத்திய ஜவுளி அமைச்சர் திரு கிரிராஜ் சிங் திறந்து வைத்ததன் மூலம் ஜவுளித் துறையில் இந்தியா தனது வளர்ந்து வரும் வலிமையை வெளிப்படுத்தி உள்ளது. இந்த மதிப்புமிக்க உலகளாவிய வீட்டு ஜவுளி கண்காட்சியில் மிகப்பெரிய நாடாக பங்கேற்றதன் மூலம், புதுமை, நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளுக்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா நிரூபித்துள்ளது.

உலகளாவிய வீட்டு ஜவுளி ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் இடையே உரையாற்றிய அமைச்சர், இந்தியாவின் வளர்ந்து வரும் போட்டித்திறனை எடுத்துக் காட்டியும் நீடித்த வளர்ச்சியை அடைவதற்கு ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். பாரத் டெக்ஸ் 2025-ல் பங்கேற்கவும், இந்தியாவின் செழிப்பான ஜவுளிச் சூழல் அமைப்பில் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறியவும் பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளுக்கும் அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

ஜவுளி மற்றும் இயந்திர உற்பத்தியாளர்களுடனான முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது, இந்தியாவின் வளர்ச்சி முறை மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து வரும் அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றை எடுத்துரைத்த அமைச்சர், ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ முன்முயற்சி ஒரு போட்டி உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுப்பதற்கு ஊக்கம் அளிக்கும் நிரூபிக்கப்பட்ட திட்டமிடல் என்று குறிப்பிட்டார். வளர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலீட்டாளர்களை ஊக்குவித்த அவர், இந்திய சந்தையில் இருந்து விலகி இருப்பது தவற விட்டுவிட்டோம்  என்ற அச்சத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார். உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், “இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் – இந்தியாவில் உற்பத்தி செய்வோம், உலகத்திற்காக உருவாக்குவோம்” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இது ஜவுளித் துறையில் உலகளாவிய தலைமைத்துவமாக தனது நிலையை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

அமைச்சர் தலைமையிலான இந்தியக் குழுவில், ஜவுளி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு ரோஹித் கன்சால், ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரக மற்றும் அமைச்சகத்தின் பிற அதிகாரிகள் இருந்தனர். ஐந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் சணல் வாரியத்தின் பிரதிநிதிகளும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இது பல்வேறு வகையான தயாரிப்புகளை காட்சிப்படுத்தி இருக்கிறது.

About Matribhumi Samachar

Check Also

கிம்பர்லி செயல்முறையின் மதிப்புமிக்க தலைமைப் பொறுப்பை 2026 ஜனவரி 1 முதல் இந்தியா ஏற்கிறது

கிம்பர்லி செயல்முறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அதன் தலைமைப் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிம்பர்லி செயல்முறையின் தலைவராக …