Monday, September 28 2026 | 08:24:30 PM
Breaking News

மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை திரிபுரா முதலமைச்சர் சந்தித்தார்

Connect us on:

திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா இன்று (16.02.2025) மத்திய அறிவியல், தொழில்நுட்பம் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார்.

மேம்பட்ட வானிலை முன்னறிவிப்பு, நிர்வாக விஷயங்கள், மூங்கில் தொழிலை ஊக்குவித்தல் உள்ளிட்ட மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விவாதித்தார். சமீபத்தில் தொடங்கப்பட்ட அகர்தலா-அகௌரா ரயில் இணைப்பு மூலம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதி – பங்களாதேஷ் இடையேயான இணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

திரிபுராவில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக 500 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ததால், மேம்பட்ட முன்னறிவிப்பு மற்றும் பேரழிவு தயார்நிலைக்கு தொழில்நுட்ப ஆதரவை முதலமைச்சர் கோரினார். புவி அறிவியல் அமைச்சகம் ஓராண்டுக்குள் மாநிலத்தில் அதிநவீன வானிலை ரேடார் ஒன்றை அமைக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் உறுதியளித்தார்.

 

भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं

सारांश कनौजिया की पुस्तकें

ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)

 

About Matribhumi Samachar

Check Also

போதைப்பொருள் இல்லாத பாரதம்: சூரத்தில் நடைபெற்ற 89-வது மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி!

இன்றைய நவீன உலகில் உடற்பயிற்சியின் அவசியத்தையும், போதைப்பொருள் இல்லா சமூகத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் ‘பிட் இந்தியா – ஞாயிற்றுக்கிழமைகளில் …