
சென்னை, ஜூன் 15. சென்னையின் முன்னணி – சிஹ்சி மருந்தகம், தந்தையர் தினத்தை நினைவுகூரும் வகையில் ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை அதன் வளசரவாக்கம் கிளையில் இலவச மருத்துவ முகமை வெற்றிகரமாக நடத்தியது.
முகாம் செயல்பட்ட நான்கு மணி நேரத்திற்குல் 200 க்கும் மேற்பட்டோர், பல முதியவர்கள் மற்றும் மகளிர் முகாமில் கலந்து கொண்டதால், இந்த முகாம் மகத்தான வரவேற்பை பெற்றது.
பங்கேற்பாளர்களுக்கு, முழுமையான ஒரு பரிசோதனைக்குப் பிறகு, அவர்களின் உடல்நிலை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது, மேலும் ஒரு உள் மருத்துவர், அவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர், மேலும் வரும் வாரங்களில் அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும் ஒரு சுகாதார அறிக்கை அட்டையும் வழங்கப்பட்டது.
குறிப்பாக, சிஹ்சி மருந்தகம் நடத்திய இரண்டாவது முகாம் இதுவாகும். முந்தைய முகாம் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மேற்கு மாம்பலம் கிளையில் நடைபெற்றது.
நிறுவனர்-தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் (மாண்புமிகு) எஸ் செந்தில் காண்டீபன் கூறுகையில், “மக்கள் எங்கள் முன்னுரிமை, பொது சுகாதாரம் எங்கள் நோக்கம். எனவே நாங்கள் எப்போதும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க பாடுபடுகிறோம்.”
சிஹ்சி மருந்தகம் கடந்த ஆண்டு ஒரு எளிய ‘மக்களுக்கு முன்னுரிமை சுகாதாரம்’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நிறுவப்பட்டது -, சுகாதாரத்தை அழித்தில் அணுகக்கூடிய, மற்றும் வசதியான அனுபவமாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று அவர் மேலும் கூறினார்.
ஆபரேஷன்ஸ் துணைத் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் கூருகையில் , “அனைவருக்கும் தற்போதைய சுகாதார நிலை குறித்த விழிப்புணர்வு, ஆரம்பகால தலையீடு மற்றும் திருத்த நடவடிக்கை போன்றவை மிகவும் முக்கியமானது. இந்த வசதியை எங்கள் சுற்றுப்புறத்திற்கும் விரிவுபடுத்தியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அவர் மீண்டும் கூறினார்.
முகாமுக்கு கிடைத்த சிறந்த வரவேற்பு, தனிப்பட்ட சுகாதாரத்திற்கான மக்களிடையே அதிக விழிப்புணர்வை வெளிப்படுத்தியது, இது அதிகரித்து வரும் மன அழுத்தம், மற்றும் உயர்ந்து வரும் சுகாதார செலவுகள் நிறைந்த இந்த காலங்களில் மிகவும் ஊக்கமளிக்கிறது.
“சமூகத்தைப் பற்றி அக்கறை கொள்ளும் ஒரு சேவையின் தேவை தெளிவாக உள்ளது, அதுவே எங்களின் நோக்கம்,” என்று டாக்டர் காண்டீபன் கூறினார்.
சிஹ்சி மருந்தகம், உண்மையான மற்றும் உலகளாவிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உங்கள் வீட்டு வாசலுக்கு நேரடியாக வழங்குவதாக உறுதியளிக்கிறது, அனைவரும் நம்பக்கூடிய ஒரு அண்டை வீட்டாராக இருக்க முயல்கிறது. இது தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான அனைத்து முதன்மை மற்றும் தேவையான சேவைகளையும் ஒரே நம்பகமான இடத்தில் ஒருங்கிணைக்கிறது, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட கண்டுபிடிப்புகளான மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை 30 நிமிடங்களில் வீட்டிலேயே இலவசமாக வழங்குதல், வீட்டிலேயே மருத்துவர் வருகைகள் மற்றும் பிசியோதெரபி, இரத்த பரிசோதனைகள் மற்றும் பலவற்றை ஒருங்கிணைக்கிறது.
மேலும் இதுபோன்ற நம்பிக்கையை வளர்க்கும் முயற்சிகளுடன், அது சுற்றுப்புறவாசிகளின் வீட்டு வாசலில் மட்டுமல்ல, அவர்களின் இதயங்களின் வாசலிலும் நுழையத் தயாராக உள்ளது.
Featured Article
Matribhumi Samachar Tamil

