Saturday, July 25 2026 | 05:28:03 PM
Breaking News

இந்தியா – யூரேசிய பொருளாதார யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து வர்த்தகத் துறைச் செயலாளர் ஆய்வு செய்தார்

Connect us on:

மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா-யூரேசிய பொருளாதார யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை வர்த்தகத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் ஆய்வு செய்தார். யூரேசிய பொருளாதார ஆணையத்தின் வர்த்தகப் பொறுப்புகளுக்கான அமைச்சர் திரு ஆண்ட்ரி ஸ்லெப்னேவ், ரஷ்ய தொழில் – வர்த்தகத் துறை துணை அமைச்சர் திரு மிகைல் யுரின் ஆகியோரையும் அவர் சந்தித்தார். மேலும் இந்திய – ரஷ்ய தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்திலும் அவர் உரையாற்றினார்.

வர்த்தகம் – பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா பணிக்குழுவின் முடிவுகளின் அடிப்படையில் இந்த விவாதங்கள் நடைபெற்றன. 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அமைச்சர் ஸ்லெப்னேவ் உடனான சந்திப்பின்போது, இந்தியா-யூரேசிய பொருளாதார யூனியன் இடையிலான தடையற்ற வர்த்த ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை வர்த்தகத் துறைச் செயலாளர் ஆய்வு செய்தார்.

துணை அமைச்சர் யுரினுடனான கலந்துரையாடல்களில், பன்முகத்தன்மை, விநியோகச் சங்கிலி, முக்கியமான கனிமங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

About Matribhumi Samachar

Check Also

கூட்டுறவு வாரம் 2026: 5 ஆண்டுகளை நிறைவு செய்த மத்திய அமைச்சகத்தின் புதிய வரலாற்று மைல்கல்!

இந்திய வரலாற்றில் கூட்டுறவுத் துறைக்கெனத் தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு, 2026 …