
காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழக ஆட்சிமன்றக்குழு தலைவராக பத்மஸ்ரீ முனைவர் கோட்டா ஹரிநாராயணா நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் 15.07.2025 அன்று அறிவித்துள்ளது. அவர் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஆட்சிமன்றக் குழு தலைவராகவும் பணியாற்றுகிறார்.
1943-ம் ஆண்டு ஒடிசாவின் பிரம்மபூரில் பிறந்த முனைவர் கோட்டா ஹரிநாராயணா, வாரணாசியில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும், மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
முனைவர் கோட்டா ஹரிநாராயணா பாதுகாப்பு, கல்வி, பொதுக் கொள்கை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மற்றும் பல்துறை பங்களிப்புகள் காரணமாக, பொறியியல் மற்றும் கல்வி நிர்வாகத்தில் நாட்டின் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவராக பாராட்டப்படுகிறார்.
भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं
ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)
Matribhumi Samachar Tamil

