ஆசிய விதை மாநாடு 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் மும்பையில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது ஆசிய விதை மாநாடு 2025-க்கான இலட்சினையும் வெளியிடப்பட்டது. தரமான விதைகள் மூலம் செழுமைக்கான விதைகளை விதைத்தல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும்,
இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குதல், விவசாயிகளுக்கு வேளாண் பணி லாபகரமாக இருப்பதை உறுதி செய்தல் ஆகியவை அரசின் முக்கிய நோக்கங்களாகும் என்று குறிப்பிட்டார்.
ஒரு ஹெக்டேரில் விளைச்சலை அதிகரித்தல், விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்குதல், உற்பத்தி செலவுகளை குறைத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.
விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விதைகளை உறுதி செய்தல், தேவையின்போது நிவாரணத் தொகை அளித்தல், வேளாண் பணிகளில் பல்வகைப் படுத்துதலில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றுக்கு அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் குறிப்பிட்டார்.
Matribhumi Samachar Tamil

