ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான வெற்றியை பெற்ற இந்திய வில்வித்தை குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியக் குழுவினர், இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக செயல்பட்டு, 6 தங்கம் உள்பட மொத்தம் 10 பதக்கங்களை வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார்.
ரிகர்வ் ஆடவர் பிரிவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பதக்கம் வென்ற வரலாற்று சிறப்புமிக்க தருணத்தையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். தனிநபர் பிரிவுகளிலும், கலப்புக்குழு பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டதையும் அவர் பாராட்டி உள்ளார். இந்த குறிப்பிடத்தக்க சாதனைகள் நாட்டின் ஏராளமான வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025-ல் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான வெற்றியை பெற்ற நமது இந்திய வில்வித்தை குழுவினருக்கு வாழ்த்துகள். அவர்கள் 6 தங்கம் உட்பட 10 பதக்கங்களை தாயகத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இவற்றில் 18 ஆண்டுகளுக்கு பிறகு ரிகர்வ் ஆடவர் பிரிவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் தங்கம் வென்றது சிறப்பானதாகும். அதே நேரத்தில், அவர்கள் தனிநபர் மற்றும் கலப்புக் குழு பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இது உண்மையிலேயே மிகச் சிறப்பான சாதனையாகும். எதிர்கால வீர்ர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.”
Matribhumi Samachar Tamil

